ஆசியா நகை கண்காட்சி 2024 - கோவையில்!!

கோவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நுண் கலை நகை கண்காட்சி மற்றும் விற்பனை, ஆசியா நகை கண்காட்சி 2024, கோவை நகருக்கு மீண்டும் திருமண மற்றும் விழாக்காலத்திற்கான  வருகை தந்துள்ளது.

இந்தியாவின் மிகச்சிறந்த 30 நகை வடிவமைப்புகள் மற்றும் பெயர் பெற்ற நகை வகைகள் ஒரே இடத்தில் வாங்க முடியும். கோவை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தாஜ் விவான்டா ஓட்டலில், 2024 ஜூன் 14, 15, 16 ஆகிய நாட்களில் நடக்கிறது.ஆசியா நகை கண்காட்சி 2024, தென்னிந்தியாவின் மிகவும் கவர்ச்சிரமான, முக்கியத்துவம் வாய்ந்த நகை கண்காட்சி மற்றும் விற்பனையாக உள்ளது. 

இந்த கண்காட்சி கோவை ரேஸ்கோர்ஸ் ரோடில் உள்ள தாஜ்விவான்டா ஓட்டலில், 2014 ஜூன் 14, 15, 16 தேதிகளில் காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணிவரை நடக்கிறது. இந்த தனித்துவமிக்க கண்காட்சி முதல் முறையாக நடக்கிறது. எப்போதும் கண்டிராத நகை வடிவமைப்புகள், இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட நகைககள் ஒரே இடத்தில் வாங்க முடியும். ஆசியா நகை கண்காட்சி 2024ஐ, பேஷன் டிசைனர் மற்றும் நகை வடிவமைப்பாளர்அபர்ணா சுங்கு, ஜிடோ கோவை அமைப்பின் தலைவர் ராகேஷ் மேத்தா ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆசியா நகை கண்காட்சி ஒரு முக்கியமான, தனித்துவமிக்க நிகழ்வாக நடக்கிறது. உயர்தர நுண்வகை தங்கம் மற்றும் வைர நகைகள் இடம் பெறுகிறது. அன்மையில் வெளியான நுண்தங்க நகைகள், வைரம், பிளாட்டினம், பராம்பரிய, திருமண நகைகள் இடம் பெற்றுள்ளன இவை  தவிர, ஆன்டிக், அரிதான கல்கள் பதித்த நகைகள், குண்டன், ஜடாவு மற்றும் போல்கி, வெள்ளி நகைகள் இடம் பெற்றுள்ளன.

ஆசியா நகை கண்காட்சி, நகரில் நடக்கும் மிகவும் அருமையான நகை கண்காட்சி. அடுத்து வரும் திருமணம், விழாக்காலங்களுக்கு முன்பதிவுகள் செய்யப்படுகின்றன. ஒரே இடத்தில் அனைத்து சிறந்த வடிவமைப்புமிக்க, அரிய வகை கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் விற்பனைக்கு வைக்கப்படுள்ளன. முன்பதிவும் செய்து கொள்ளலாம். சர்வதேச தரத்தில் தென்னிந்திய அளவில் நகைகளை வாங்க நேர்த்தியான இடம் இந்த கண்காட்சி.

பெங்களுரு, மும்பை, டில்லி, ஜெய்ப்புர், ஐதராபாத் மற்றும் கோவையை சேர்ந்த பல சொகுசான நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் கவர்ச்சிகரமான, அனைத்து பிராண்டுகளுக்குமான தளம் இது. சர்வதேச நகை வடிவமைப்புடன், இந்திய அளவிலான மிக உயர்ந்த பிராண்டுகள் இடம் பெறுகின்றன.

குறிப்பாக, பெங்களுரு கஜராஜ் ஜூவல்லரி, ஸ்ரீகணேஷ் டயமன்ட் ஜூவல்லரி, கேயா ஜூவல்லர்ஸ், டில்லியை சேர்ந்த ஷேகல் ஜூவல்லர்ஸ், மும்பை நேகா கிரியேஷன்ஸ், மும்பை ரேணுகா பைன் ஜூவல்லர்ஸ், கோவை கற்பகம் ஜூவல்லர்ஸ், டில்லி சிரியன்ஸ் ஜூவல்ஸ், மும்பை ஜிவா ஜூவல்லரி, ஐதராபாத் அகோயா ஜூவல்ஸ், மும்பை ருமிஸ் ஜூவல்ஸ், பிரிடம் ஜூவல்ஸ், மும்பை ஹவுஸ் ஆப் இபான், மும்பை டயமார்ன் ஜூவல்லரி,

சென்னை அஞ்சலி, ஜெய்ப்புர் எப்இசட் ஜெம்ஸ், சென்னை என்ஏசி ஜூவல்லர்ஸ், பெங்களுரு ஸ்டைல் ஆரா மற்றும் பிற பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் பங்கேற்கின்றனர் அசியா நகை கண்காட்சி 2024 பற்றி:ஆசியா நகை கண்காட்சியானது, செழுமையான, நேர்த்தியான கண்காட்சி. அமோக வரவேற்பை பெற்ற எச்ஆர்எஸ் மீடியாவின் காட்சி நிகழ்வு இது.கண்காட்சி பற்றிய மேலும் விபரங்கள் அறிய  9620461919 என்ற எண்ணிலோ,  info@hrsmedia.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். https://hrsmedia.in என்ற இணையத்தளத்தையும் பார்வையிடலாம்.

-சீனி, போத்தனூர்.

Comments