ரஷ்யாவில் மருத்துவம்,பொறியியல் போன்ற துறைகளில் உயர்கல்வி பயில்வதற்கு கோவையில் வரும் ஜூன் 28 ந்தேதி வழிகாட்டுதல் கண்காட்சி.
கோவை: ரஷ்யாவில் சென்று மருத்துவம், பொறியியல்,தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர்கல்வி பயில்வதற்கான கல்வி கண்காட்சி கோவையில் வரும் ஜூன் 28 ஆம் தேதி அவினாசி சாலையில் உள்ள தி கிராண்ட் ரீஜன்ட் ஓட்டலில் நடைபெற உள்ளது.இந்த நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.இதில்,ஸ்டடி அப்ராட் (Study Abroad) மேலாண் இயக்குனர் சுரேஷ் பாபு செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது பேசிய அவர்,2024- -25ம் கல்வி ஆண்டில், இந்திய மாணவர்களுக்கு 8000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக் கழகங்கள் வழங்க உள்ளன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் அனைத்து சமீபத்திய விதிமுறைகளையும் ரஷ்யா கடைப்பிடித்து வருவதாலும், மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதாலும், மருத்துவக் கல்வியைப் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.இந்த மருத்துவப் படிப்புகளுக்கான ஸ்பாட் அட்மிஷன், நடைபெற உள்ளதாக குறிப்பிட்ட அவர், எம்.பி.பி.எஸ். மட்டுமல்லாது பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் ஸ்பாட் அட்மிஷன் கிடைக்கும் என தெரிவித்தார்.நீட் தேர்வில் வெற்றி பெற்று குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் தங்கள் மருத்துவ கனவை நனவாக்க ரஷ்யாவில் உள்ள பல்கலைகழகங்களில் மருத்துவம் பயில்வதற்கு இது வாய்ப்பு என குறிப்பிட்டார்.இந்த கல்வி கண்காட்சியில், ரஷ்யாவை சேர்ந்த கஜான், வோல்காகிரேடு, மெபி மருத்துவ பல்கலை கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், டீன்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு, மருத்துவத் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்துப் பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மாணவர்களுக்கு அரசு நிதியுதவியுடன் ஆண்டுக்கு, 3 லட்சம் ரூபாய் முதல் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,
தேவைப்படுபவர்களுக்கு வங்கி கடன் உதவிகளும் ஏற்பாடு செய்து தருவதாக அவர் தெரிவித்தார்.
-சீனி, போத்தனூர்.
Comments