தாய்ப்பால் விற்பனை… தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு....

சென்னை மாதவரம் பகுதியில் தாய்ப்பாலை சட்டவிரோதமாக பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வந்ததனியார் புரோட்டீன் மருந்து விற்பனைகடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். விசாரணையில் புரோட்டீன் பவுடர் விற்பதற்காக வழங்கப்பட்ட உரிமத்தை வைத்து தாய்ப்பால் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தாய்ப்பால் விற்பனை குறித்து தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

தாய்ப்பால் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால் சென்னையில் தாய்ப்பால் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தாய்ப்பால் விற்பனை குறித்து 94440 42322 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகார்களை வாட்ஸ் - அப் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தியாகவோ அனுப்பலாம். புகாரின் பேரில் தீவிர ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-அருண்குமார்,கிணத்துக்கடவு.

Comments