ஜி.கே.என்.எம். மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளிநோயாளி மையம், 'மிகப்பெரிய ஒருங்கிணைந்த வெளிநோயாளி மையம்' எனும் சாதனை படைத்து!!
கோவையில் செயல்பட்டு வரும், ஜி.கே.என்.எம். மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளிநோயாளி மையம், 'மிகப்பெரிய ஒருங்கிணைந்த வெளிநோயாளி மையம்' எனும் சாதனை படைத்து,ஆசியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
கோவை அவினாசி சாலையில் , ஜி.கே.என்.எம். மருத்துவ ஆராய்ச்சி & வெளிநோயாளி மையம் (GKNMIOP) ' 3.3 லட்சம் சதுர அடியில், 2.39 ஏக்கரில், ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த வெளிநோயாளி மையமாக செயல்பட்டு வருகிறது.. 8 தளங்களுடன், நோய் கண்டறிதல், அவசர சிகிச்சை மற்றும் பகல்நேர பராமரிப்பு அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட விரிவான சேவைகளை வழங்கி வரும்,இந்த மையத்தில், 30 மருத்துவத் துறைகள் மற்றும் 200 அனுபவம் வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டு சிறந்த வெளி நோயாளிகள் பிரிவாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், GKNMIOP 'மிகப்பெரிய ஒருங்கிணைந்த வெளிநோயாளி மையம்' என்ற சாதனையுடன், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளது. இந்த சாதனையை கொண்டாடும் விதமாக மருத்துவமனை வளாகத்தில்,.நடைபெற்ற நிகழ்ச்சியில், . ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சான்றாளர், விவேக் ஆர் நாயர்.ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர்.
ரகுபதி வேலுசுவாமியிடம் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின், 'மிகப்பெரிய ஒருங்கிணைந்த வெளிநோயாளி மையம்' என்ற சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இந்த சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள்,செவிலியர்கள்,ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
சாதனை படைத்த மருத்துவமையத்தில், யோகா மற்றும் அக்குபஞ்சர், 24 மணி நேரம் இயங்கும் மருந்தகம் மற்றும் ஹோம் ஹெல்த் சேவைகள் நடைபெற்று வருகிறது குறிப்பிடதக்கது.
-சீனி, போத்தனூர்.
Comments