கோவை ராம்நகரில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா புதுப்பிக்கப்பட்ட கிளை துவக்க விழா நடைபெற்றது!!

பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆப் இந்தியா கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் 67 கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது.

இந்நிலையில் கோவை ராம்நகர் பகுதியில் இயங்கி வந்த யூனியன் பேங்க் ஆப் இந்தியா புதுப்பிக்கப்பட்டு அதே பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி சாலையில் புதிய கட்டிடத்தில் தனது சேவையை துவங்கியது. இதில் கோவை மண்டல தலைவர் லாவண்யா முன்னிலை வகித்தார். 

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சதர்ன் இண்டியா மில்ஸ் அசோசியேஷன் தலைவரும், சிவா டெக்ஸ்யாம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான  சுந்தர ராமன் புதுப்பிக்கப்பட்ட கிளை அலுவலகத்தையும், ஏ.டி.எம்.அறையை எல்.ஐ.சி.கார்ப்பரேட் ஏஜன்ட் சீனிவாசன், ஸ்ட்ராங் ரூம் அறையை பட்டய கணக்காளர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த கிளையில் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதமான வங்கி சேவைகளும் வழங்கும் வகையில் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

-சீனி, போத்தனூர்.

Comments