வனவிலங்கு தாக்குதலில் இருந்து வால்பாறை மக்களை பாதுகாத்துக் தருமாறு தமிழக வணிகர் சம்மேளனம் கோரிக்கை!!

.

அப்பொழுது  வால்பாறை கால்பந்தாட்ட அசோசியேஷன்  நடத்தும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு  பரிசளிப்பு மற்றும்  சான்றிதழ்கள்  வழங்கி விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தார்.  

இதனை தொடர்ந்து வால்பாறையில் வனவிலங்கு  தாக்குதலால் உயிரிழப்பு ஏற்படுகிறது இது தடுத்து நிறுத்த வனத்துறை  அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வால்பாறை காவல்  ஆய்வாளரிடம்  நேரில் சென்று மனு அளித்தார்.

அந்த மனுவில் வால்பாறையில்  தொடர்ந்து வனவிலங்கு தாக்குதலால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் இப்பகுதியிலே ஆலோசனை  கூட்டம் நடத்த வேண்டும் என்றும் இல்லையென்றால்  எங்க அமைப்பு  மூலம் தமிழக முழுவதும்  விரைவில் ஆட்சியாளர் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவர் கொடுத்த மனு மீது நேரடியாக நாமும் களத்தில் இறங்கிய போது உண்மையிலே  வால்பாறை பகுதியிலே  தொடர்ந்து வனவிலங்கு தாக்குதல் ஏற்படுகிறது விலைமதிப்பற்ற மனித உயிர் பறிக்கப்படுகிறது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உயிரிழந்தவர்களுக்கு மாலை  போடுவதும் அவர்களோடு  இருப்பது போல் செய்தித்தாள்களிலும் whatsapp உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும்  புகைப்படம்  எடுத்து  பதிவு செய்வது மட்டுமே அவர்கள் வேலையாகவே உள்ளது.

ஆனால் வனவிலங்கு தாக்குதல் தடுத்து நிறுத்த ஆட்சியாளர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனையாக உள்ளது அதிலும் குறிப்பாக தமிழக வணிகர் சம்மேளனம்  மட்டும் தான் இப் பிரச்சினையே ஆட்சியாளர் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளது என்பது எதார்த்தமான உண்மையாக தெரிகிறது. 

இதை தமிழக அரசும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மனித உயிர்களைக் காக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-P.பரமசிவம், வால்பாறை.

Comments