முதல்வரிடம் கோல்ட் மெடல் -"யோகா" தமிழினி பெருமிதம்!

ஒரு மாநிலத்தின் முதல்வர் கோல்டு மெடல் தந்ததையும் தனது தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்ததையும் பெருமிதமாக நம்மிடம் பகிர்கிறார், யோகா சாம்பியன் சிறுமி...!! 14 வயதில் யோகாவில் 120 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்று அசத்தி வருகிறார்,  யோகா இளவரசி தமிழினி.  

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 7-வது படித்து வரும் தமிழினி  கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலும் சேம்பியன் பட்டத்தை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். 

7-வது படித்து கொண்டே உலக அளவில் நடைபெறும் பல்வேறு யோகா போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளையும் அள்ளி வருகிறார்,  சிறுமி தமிழினி. 

இவர், கூடுதல் சிறப்பாக  கலந்து கொண்டுள்ள போட்டிகள் பலவற்றிலும் பெரும்பாலும் முதல் பரிசை தட்டி சென்றுள்ளார். உலக ஆன்லைன் யோகா சாம்பியன்ஷிப்பில் "யோகா இளவரசி" என்ற பட்டத்தை பெற்றுள்ள தமிழினி .கடந்து 7 வருடங்களாக யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு அரசியல் தலைவர்களிடமும், பிரபலங்களிடமிருந்தும் நேரடியான பாராட்டுதல் பெற்றிருக்கிறார். 

"என்னுடைய 6-வது வயதிலேயே யோகா பயிற்சி வகுப்பில் சேர்ந்து விட்டேன். "

சிறு வயதில் ஏற்பட்ட வீசிங் பிரச்சினை காரணமாக மருத்துவரின் அறிவுரைப்படியே யோகாவை கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தேன்.  சாதாரணமாக நான் ஆரம்பித்த இந்த யோகா பயணம், பிறகு அதில் நான் காட்டும் அதீத ஈடுபாடுகளை கண்டு எனது யோகா குரு விஜய மோகன் ராவ் அவர்கள் என்னை பல்வேறு போட்டிகளுக்காக தயார் படுத்தினார்.  

தற்போது  உலக அளவிலான பல்வேறு யோகாசன போட்டியில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய அளவிலான போட்டிகளில் வென்றுள்ளேன்.  மேலும் யோகா போட்டிகளுக்கான பல்வேறு வயதிற்கான  பிரிவில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று வருகிறேன்.

இதுவரை 120 மெடல்களையும் பரிசுகள் மற்றும் விருதுகளையும் வாங்கியுள்ளேன்" என பெருமையுடன் கூறுகிறார், தமிழினி. புதுவையில் நடைபெற்ற 2024 -ம் ஆண்டிற்கான    யோகா திருவிழாவில் 9 முதல் 14 வயதினருக்கான பிரிவில் கலந்துகொண்டு முதல்வர் ரங்கசாமி அவர்களிடமிருந்து முதல் பரிசுக்கான கோல்ட் மெடலை வாங்கினேன்.

அதேபோன்று கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளேன்.  மேலும் யோகா இளவரசி, யோகா நட்சத்திரா, தங்கத் தாரகை போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறேன்.

இந்திய யோகா பெடரேஷன் நடத்திய 72-வது தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் ஓப்பன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளேன்.  தமிழ்நாடு மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்திய போட்டியில் ஓவர் ஆல் சாம்பியனாக வந்திருக்கிறேன்.

தென்னிந்திய யோகா சாப்பியன்ஷிப் போட்டியில் 2-வது இடம் கிடைத்தது.  தமிழ்நாடு அளவிலான யோகாசன சாம்பின்ஷிப் போட்டியின் வெற்றி பெற்றுள்ளேன். நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான போட்டியில் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தையும் யோகா நட்சத்திர விருதினையும் பெற்றுள்ளேன். 

ஆசிய போட்டிகளில் பங்கு பெற்று சௌத் இந்தியாவில் நடந்த போட்டிகளில் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தினை 6  முறை வாங்கி இருக்கிறேன்.  மேலும் அதே போட்டிகளில் பங்கு பெற்று 6 முறை ரன்னராகவும் வந்திருக்கிறேன். 

ஆசியா அளவில் யோகா போட்டி ஆன்லைனில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சாம்பியன் ஆப் சாம்பியன் வென்றேன். இந்தியன் ஹத்தா யோகா பெடரேஷன் நடத்திய விர்சுவல் தேசிய விளையாட்டு போட்டியில் சாதனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். 

இன்டர்நேஷனல் யோகா ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் நடத்திய போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளேன். தற்போது வரை தமிழக அளவில் மற்றும் தேசிய அளவில் நடைபெறும் பல்வேறு யோகா சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் பரிசை பலமுறை வென்றதோடு, ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பலமுறை வென்றுள்ளேன். 

எனக்கு யோகாவில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. வருங்காலத்தில் யோகா பயிற்சிக்கு என யோகா பள்ளியை ஏற்படுத்தி பலருக்கும் யோகாவின் பயன்கள் குறித்து சொல்லி தரவேண்டும். 

என் வீசிங் பிரச்னை சரியானதை போல பலரின் ஆரோக்கியம் குறித்த விஷயங்களுக்கு யோகக்கலை நல்ல பலனை தருமென நம்புகிறேன். அதற்காக யோகா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறேன். இந்தியா சார்பாக பல்வேறு உலக போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். 

இன்னும் நிறைய விருதுகளை வாங்க வேண்டும். சிறந்த யோகா ஆசிரியராக வேண்டும் என்பது என ஆசைகளில் ஒன்று. மேலும் ஒலிம்பிக்கில் யோகா போட்டிகள் வைத்தால் இந்தியா சார்பாக பங்கேற்று நிறைய மெடல்களை வாங்க வேண்டும். 

யோகா கலை மூலமாக மக்களிடையே நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும். இந்த சின்னஞ்சிறு வயதில் பெரிய பெரிய ஆசை, கனவுகள், இலட்சியங்களுடன் பேசுகிறார், யோகா சிறுமி தமிழினி.

- ஆர்.கே.விக்கிரம பூபதி.

Comments