என்.எஸ்.எஃப் (NSF) சார்பாக மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!!


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவையில் இயற்கை அறிவியல் நிறுவனம் சார்பாக பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கி மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையை தலைமையிடமாக கொண்ட நேச்சர் சயின்ஸ்  பவுண்டேஷன் நிறுவனர் ராஜலட்சுமி தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கை அறிவியல் நிறுவனம் எனும் என்.எஸ்.எஃப் (NSF) சார்பாக மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை ரோஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது. பவுண்டேஷன் இயக்குனர் வினோத் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற, இந்நிகழ்ச்சியில்,ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வரும்,பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. குறிப்பாக இளம் தலைமுறையினருக் கு மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதாக இயக்குனர் வினோத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் இயற்கை அறிவியல் நிறுவனத்தின் குழுவினர் சிவரஞ்சனி, நித்யா,சந்தியா மாசிலாமணி,கோகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-சீனி,போத்தனூர்.

Comments