ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் வெறி நாய் கடித்து 11 பேர் காயம்...

 

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் வெறி நாய்கடி பொதுமக்கள் பதட்டம்.. ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் வெறிநாய் ஒன்று சுற்றி திரிந்துள்ளது இந்நிலையில் நேற்று இரவு 3 நபர்களையும் இன்று காலையில் எட்டு நபர்களையும் கடித்துள்ளது. வெறி நாய் கடித்த 11 நபர்களுக்கும் புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  தடுப்பூசி போடப்பட்டது. இதுகுறித்து புதியம்புத்தூர் தெற்கு காலனி தெருவை சேர்ந்த அர்ச்சுனன்(45)என்பவர் கூறுகையில் நண்பர் ஒருவருடன் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் பஜாருக்கு செல்லும்போது வெறிநாய் ஒன்று கடித்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை அடுத்து புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தடுப்பூசி போடப்பட்டது. 


மேலும் பத்துக்கும் மேற்பட்ட நபர்களை வெறிநாய்  கடித்துள்ள நிலையில்  புதியம்புத்தூரில் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அலைகிறது அதேபோல்  வெறி நாய்களும் அலைவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் தெரு நாய்கள் மற்றும் வெறி நாயை பிடித்து அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வெறிநாய்க்கடித்து 11 பேர் காயமடைந்த சம்பவம் புதியம்புத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வராலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம்,          

-எஸ் நிகில்.

Comments