கோவையில் இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் சார்பில் சி ஏ மாணவர்கள் மாநாடு 2024 நடைபெற்றது!!

கோவையில் இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் சார்பில்  சி ஏ மாணவர்களுக்கான தேசிய  மாநாடு 2024 ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரண்டு நாட்கள் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. 

இந்த மாநாட்டில்  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சி ஏ படிக்கும் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இரண்டு நாட்கள் நடைபெற உள்ள கருத்தரங்கில் முதல் நாளான இன்று தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆப் இந்தியா மற்றும் போர்ட் ஆஃப் ஸ்டடிஸ் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு ( ICAI ), தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் பிராந்திய கவுன்சில் கோவை கிளை ( SIRC ) மற்றும் தென்னிந்திய  பட்டயக் கணக்காளர்கள் மாணவர்கள் சங்கம் கோவை கிளையால் ( SICASA ) நடத்தப்படும், கருத்தரங்கில் வருமான வரிச் சட்டங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்த கலந்துரையாடல், சிஏ படிப்பிற்கான ஆர்வத்தை தூண்டும் வகையிலான சொற்பொழிவுகள், ஜிஎஸ்டி மற்றும் ஏ.ஐ, (செயற்கை நுண்ணறிவு) குறித்த கலந்துரையாடல்கள் உள்ளிட்டவை இடம்பெற்றன.ஐசிஏஐ முன்னாள் தலைவர் சி.ஏ  ராமசாமி தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். 

சிஏ ஆர்.கேசவன், முன்னாள் இயக்குநர்-நிதி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார்.CA K.ஸ்ரீப்ரியா குமார், மத்திய கவுன்சில் உறுப்பினர், கோவை ஐசிஏஐ  கிளையின் தலைவர் விஷ்ணு ஆதித்தன், SICASA கோவை கிளை தலைவர் CA தங்கவேல் M ,ICAI கோவை கிளையின் செயலாளர் CA சர்வஜித் எஸ்.கிருஷ்ணன் மற்றும் பல தொழில்துறையினர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆப் இந்தியாவின் முன்னாள் பிரசிடெண்ட் ஜி ராமசாமி கூறியதாவது, "சிஏ படிக்கும் மொத்த மாணவர்களில் 40% பேர் பெண்கள்.அதுமட்டுமில்லாமல் ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சார்ட்டட் அக்கவுண்ட்டாக பணியாற்றுகிறார்கள். 

எனவே சார்ட்டட் அக்கவுண்ட் பெண்களின் வளர்ச்சிக்கான ஒரு சிறந்த வேலையாக திகழ்கிறது. பொருளாதார வளர்ச்சி காரணமாக 2047-ம் ஆண்டு காலகட்டத்தில் சுமார் 30 லட்சம் சார்ட்டட் அக்கவுண்ட்டுகள் தேவைப்படலாம் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. எனவே அந்த இலக்கை நோக்கி மாணவர்களை கொண்டு சேர்க்கும் வகையில் சிஏ இன்ஸ்டியூட் ஆனது செயல்பட்டு வருகிறது. 

மேலும் இந்திய சார்ட்டட் அக்கவுண்டென்டுகளை உலக அளவில் கொண்டு சேர்க்கும் முயற்சியிலும் தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆப் இந்தியா ஈடுபட்டுள்ளது." என்று அவர் கூறினார்.

இந்திய பொருளாதாரம் 5 ட்ரில்லியனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  வருங்காலத்தில் தொழில் நிறுவனங்கள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் பொருளாதாரத்தில் சார்ட்டட் அக்கவுண்ட்களின் பங்கு அவசியமான ஒன்றாக இருக்கும் என்பதால் சிஏ படிப்புகளுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக பெண்கள் சிஏ படிப்பில் ஆர்வம் காட்டுவது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.

கலை, அறிவியல், வணிகம் என எந்த பிரிவில் பட்டம் பெற்றவர்களும் சி ஏ படிக்கலாம். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்களும் சிஏ படிக்கலாம். வருங்காலத்தில் மருத்துவம் பொறியியல் போன்று சிஏ படிப்புகளும் போட்டி நிறைந்த படிப்பாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-சீனி, போத்தனூர்.

Comments