கோவையில் முல்லை மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் ஒண்பாதவது சிலம்பக்கலை பட்டயம் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது!!
தமிழர் பாரம்பரிய கலையான சிலம்ப கலையை தற்போது பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். இந்நிலையில், கோவை, சேரன் மாநகர்,சின்னவேடம்பட்டி, மற்றும் திருப்பூர் பாளையக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிலம்பம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய கலைகளை முறையாக பயிற்சி வழங்கி வரும் முல்லை தற்காப்பு கலை பயிற்சி மையம் தனது ஒன்பதாவது சிலம்பக்கலை பட்டயம் வழங்கும் நிகழ்ச்சியை குரும்ப பாளையம் எஸ்.பி.எம்.ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நடத்தியது.
தலைமை தேர்வாளர் அன்பரசு அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இதில், முல்லை தற்காப்பு கலை பயிற்சி மையத்தின் நிறுவனர் டாக்டர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.இதில், சிலம்பத்தில் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, மான் கொம்பு, வேல் கம்பு, அலங்கார சிலம்பம், தீ சிலம்பம், வாள் வீச்சு, சுருள் வாள், போர் சிலம்பம், குத்து வரிசை உள்ளிட்ட பயிற்சிகளை வகுப்பு வாரியாக நிறைவு செய்தவர்களுக்கு தேர்வு நடைபெற்றது.
ஆறு மாத பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரிவு வாரியாக கலர் பட்டயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குப்பட்டது.இந்நிகழ்ச்சியல் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி் ஒன்றிய தலைவர் கோமளவல்லி கந்தசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்நகழ்ச்சியில் முல்லை தற்காப்பு கலை பயிற்சி மைய பொது செயலாளர் வை.கீர்த்திகா கலந்து கொண்டு தேர்வு பெற்ற மாணவ,மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில், நான்கு வயது முதல் பள்ளி , கல்லூரி மாணவ,மாணவிகள் நூற்றுக்கும் மேறபட்டோருக்கு ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, கருப்பு போன்ற பட்டயங்களுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.. இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள்,பயிற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments