விளாத்திகுளம் அருகே மனு கொடுத்த பள்ளி மாணவிக்கு பாடம் கற்பித்த கனிமொழி எம்.பி.!
நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக சார்பில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி. இன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளத்தூர், கீழ வைப்பார், விளாத்திகுளம், வேம்பார், சூரங்குடி, நாகலாபுரம், சின்னவநாயக்கன்பட்டி, புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி தன்னை மீண்டும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்து பொது மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது சின்னநாயக்கன்பட்டி கிராமத்தில் மக்களிடம் நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட்ட கனிமொழி எம்.பி., பள்ளி மாணவி ஒருவர் சீருடையில் கையில் மனுவுடன் இருப்பதைக் கண்டு வாகனத்தை நிறுத்தி, மாணவி காவியாவிடமிருந்து (வீடு கோரிக்கை தொடர்பான) மனுவை வாங்கி படித்தார். அம்மனுவில் மாணவி காவியா தனது தந்தை கூலி வேலை செய்வதாக குறிப்பிட்டு இருந்ததில் கூ(லி) என்பதற்கு பதிலாக கூ(ளி) என்ற எழுத்துப் பிழையுடன் எழுதி இருப்பதை கண்டு மாணவிக்கு கனிமொழி எம்.பி. பொறுமையாக எப்படி எழுத வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தார். அதைத்தொடர்ந்து மாணவியிடம் எந்த பள்ளியில் பயில்கிறீர்கள்..? நன்றாக படிக்க வேண்டும் என்றெல்லாம் சிறிது நேரம் உரையாடிவிட்டு மாணவியின் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றார்.
மேலும் பொதுமக்களிடம் பேசிய போது; "உங்களோடு நின்று உங்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.., உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் முழுமூச்சாக பாடுபடுவேன்" என்று கூறி தன்னை இரண்டாவது முறையாக மீண்டும் தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, இப்பகுதியில் தேர்தல் பணியாற்றிய அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், உட்பட கட்சி நிர்வாகிகள் தனது அனைவருக்கும் நன்றி தெரிவித்துச் சென்றார்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.
Comments