கிளஸ்டர்ஸ் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் மீடியா அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள கிளஸ்டர்ஸ் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் மீடியா அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கிளஸ்டர் வளாக அரங்கில் நடைபெற்றது.
கல்லூரியின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இதில், கல்லூரி முதல்வர் முனைவர் குணாளன் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ஜி.ரவி கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் மாறி வரும் நவீன தொழில் நுட்பத்திற்கு தகுந்தபடி மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
குறிப்பாக கம்யூனிகேஷன் திறன்களை இளம் தலைமுறை மாணவர்கள் வளர்த்தி கொள்வது தற்போது அவசியமாக இருப்பதாக கூறிய அவர்,
ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என குறிப்பிட்டார். இந்திய நாட்டின் வளர்ச்சியில் இனி வரும் காலங்களில் இளம் தலைமுறை மாணவர்களின் பங்கு அதிகம் இருக்க போவதாக தெரிவித்தார்.
கனவுகளை எப்படி வெற்றியாக மாற்றுவது என்பதை சரியான திட்டமிடல்களால் சாதிக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர்,வாழ்க்கையில் வரும் தோல்விகளில் இருந்து பாடம் கற்று,சவால்களை எதிர்கொள்வதிலும் தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து விழாவில், காட்சி தொடர்புத்துறை எனும் விசுவல் கம்யூனிகேஷன் மற்றும் இயங்கு படத்துறை எனும் அனிமேஷன் ஆகிய துறைகளை நிறைவு செய்த மாணவ,மாணவிகள் பட்டங்களை வழங்கியும் அதே போல, பல்கலைக்கழக தர வரிசையில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் துறை சார்ந்த தலைவர்கள் ராஜ்கமல்,கவுதம்,உட்பட பல்வேறு துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments