கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் நடைபெறவுள்ளது....


ரவுண்ட் 3  ப்ளூ பேண்ட் FMSCI இந்திய தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2024 இன்றும் நாளையும் என  இரண்டு  நாட்கள் ரேஸ் பிரியர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது. கோவையில் புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் 2024ம் ஆண்டின் 3ம் சுற்றுக்கான ராலி ஆப் கோயம்புத்தூர் வரும் இன்றும் நாளையும்  நடைபெறவுள்ளது. 

இந்த எப்.எம்.எஸ்.சி.ஐ. சாம்பியன்ஷிப் நிகழ்வுகளுக்கு 2022-26 ஆண்டுகாலம் வரை கோவையில் செயல்படும் புளூ பேண்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ ப்ரோமோட்டராக உள்ளது, இந்த சாம்பியன்ஷிப் சுற்றின் முதல் சுற்று சென்னையிலும் இரண்டாம் சுற்று நாசிக்கிலும் வெற்றிகரமாக நடைபெற்றதை தொடர்ந்து கோவையில் 3ம் சுற்று ஜூலை 27 மற்றும் ஜூலை 28ல்  நடைபெறுகிறது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதன் துவக்க விழா,  கோவையில் உள்ள  தனியார் உணவக அரங்கில்  நடைபெற்றது.  இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையர், பாலகிருஷ்ணன்   கலந்து கொண்டு, கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் கவுரவ விருந்தினராக  எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள், போட்டியாளர்கள், ஓட்டுனர்கள், மற்றும் புளூ பேண்ட் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். 2 நாட்கள் நடைபெறும் இந்த கார் ராலியில் மொத்தம் 8 பிரிவுகளில்  போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த 8 பிரிவுகளில் மொத்தம் 8 சுற்றுக்கள் இதில் இடம் பெறும் எனவும் இதில் மொத்தம் 269.38 கிலோ மீட்டர் தொலைவை வேகமாக கடக்க வேண்டும் எனவும், 

முதல் நாள் நிகழ்வுகளுக்கான போட்டிகள் L&T சாலையில் உள்ள  எஸ்எம் அக்ரோ வளாகத்திலும், இரண்டாம் நாளுக்கான போட்டிகள் கோவையை அடுத்த கேத்தனூர் பகுதியிலும் நடக்கிறது என விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments