கோவை சரவணம்பட்டி பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கான வரவேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது!!


கோவை சரவணம்பட்டி பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுஸ்வாகதம் 2024 எனும் முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கான  வரவேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை சரவணம்பட்டி பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024 ஆம் கல்லூரி வாழ்க்கையை துவங்க போகும்  முதலாம் ஆண்டு மாணவ,மாணவிகளை வரவேற்கும் விதமாக  சுஸ்வாகதம்  2024 எனும்  மாணவர்களுக்கான வரவேற்பு விழா  கல்லூரி அரங்கில் நடைபெற்றது..

பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர்  டாக்டர் L.P தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இதில்,கல்லூரியின் தாளாளர் சாந்தி தங்கவேலு,நிர்வாக அறங்காவலர் அக்‌ஷய் தங்கவேலு கல்லூரி நிர்வாக இயக்குனர் கேப்டன் டாக்டர்.அமுதகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி  முதல்வர் முனைவர். முத்துமணி அனைவரையும் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் டாக்டர்  தங்கவேலு தனது தலைமையுரையில், .   மாணவர்கள்   ஒழுக்கம், விடாமுயற்சி, நேர்மையுடன் இருந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயமே என்று கூறிய அவர், பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்றும்   பிள்ளைகளாக மாணவ,மாணவிகள் தங்கள் கல்லூரி காலங்களை பயன்படுத்தி கற்று கொள்ள வேண்டும் என கூறினார்.   இவ்விழாவில் சிறப்பு விருந்தனராக கோவை மாநகர  காவல் துறை   துணை ஆணையர் டாக்டர்.  ஸ்டாலின்  கலந்து கொண்டு மாணவ,மாணவிகளிடையே உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், கல்வியின் நோக்கம் என்ன என்பதை உணர்ந்து மாணவர்கள் தங்கள் குறிக்கோளை  நிர்ணயம்  செய்ய வேண்டும்  என்றார். மேலும் தங்களின் பலம்,  பலவீனத்தை அறிந்து செயல்பட்டால் வாழ்வில் வெற்றிபெற முடியும் என்று எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சந்திரகலா உட்பட துறை தலைவர்கள்,பேரசிரிய்யர்கள்,மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments