மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது முகநூலில் அவதூறு செய்தவர்களை கைது செய்ய கோரி கோவையில் புகார் மனு!!

 

கோவை: ராகுல் காந்தி குறித்து முகநூலில் தரக்குறைவாக விமர்சித்துள்ளவர்களை கைது செய்ய கோரி கோவையில் காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையினர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ராகுல் காந்தி குறித்து முகநூலில் தரக்குறைவாக விமர்சித்துள்ளவர்களை கைது செய்ய கோரி கோவையில் காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையின் மாநில செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லா தலைமையில் சுமார் இருபத்துக்கும் மேற்பட்டோர் கோவை  மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.அதில், புத்தர் போதனைகள் என்ற முகநூல் பக்கத்தின்  பதிவில் காங்கிரஸ் எம்.பி.யும்,மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை   தரக்குறைவாக  ஒருமையில் விமர்சித்துள்ளதோடு,  மதக்கலவரத்தைத் தூண்டும் விதமாகவும் .வெ.சுந்தரமூர்த்தி என்பவர் பதிவிட்டுள்ளார்.

எனவே மேற்படி முகநூல் பக்கத்தில் பதிவு செய்த சுந்தரமூர்த்தி என்பவரின் மீது , இந்திய தண்டனைச் சட்டம் முகநூல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்குமாறும். மத மோதல்கள் ஏற்படுத்தும் இது போன்றவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி   மனுவில் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் எம்.பி-யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த  திங்கள்கிழமை மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாகத் தாக்கிப் பேசிய நிலையில்,முகநூல் பக்கத்தி்ல் விமர்சித்த நபர்களை கைது செய்ய கோரி காங்கிரஸ் மனித உரிமை துறையினர் கோவையில்  அளித்துள்ள இந்த புகார் மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

-சீனி, போத்தனூர்.

Comments