கோவை ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் இந்திய அளவில் பிரபலமான ஹைதராபாத் ஸ்ரீ ஜுவல்லர்ஸ் தனது நகை கண்காட்சியை துவங்கியது!!
இந்திய அளவில் பிரபலமான ஹைதராபாத் ஸ்ரீ ஜுவல்லர்ஸ் தனது பிரத்யேக நகை கண்காட்சியை கோவையில் நடத்தியது.
ஜூலை 4 மற்றும் 5 என இரண்டு நாட்கள் கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி டவர்ஸ் பால் ரூம் அரங்கில் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா,
ஹைதராபாத் ஸ்ரீ ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர்கள் அபிஷேக் அகர்வால்,அர்பிதா அகர்வால் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரீனா கோத்தாரி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில், பல்வேறு துறை சார்ந்த முக்கிய விருந்தினர்கள் ரிங்கி ஷா,மீனா ஜெயகுமார்,கவிதா கோபாலகிருஷ்ணன், சந்தோஷி ராஜேஷ்,ஹேமா சங்கவி, அனுஷா ரவி,ஆகியோர் கலந்து கொண்டு நகை கண்காட்சியை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்..
இந்த கண்காட்சியில் விலை உயர்ந்த, வைரம்,வைடூரியம்,இரத்தினம்,பச்சை கற்கள் பதித்த, நுண்தங்க நகைகள், வைரம், பிளாட்டினம், பராம்பரிய, திருமண நகைகள், ஆன்டிக் கலெக்ஷன்ஸ்,மற்றும் , அரிதான கற்கள் பதித்த நகைகள், குண்டன், ஜடாவு மற்றும் போல்கி, வெள்ளி நகைகள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக, இந்தியாவின் மிகச்சிறந்த, நகை டிசைன்கள், பெயர் பெற்ற நகை வகைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.
-சீனி, போத்தனூர்.
Comments