ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி ஒருங்கிணைப்பு விழா!!

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியருக்கான ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது. எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு.டி.லக்ஷ்மி நாராயணசாமி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசும்போது, தேசிய அளவிலான பல்வேறு ஆய்வுகளில் கல்லூரி பெற்ற சிறப்புகளைக் குறிப்பிட்டார். கல்வி என்பது அறிவைப் பெறுவதோடு, படைப்பாற்றல், சாதுரியம் போன்ற பல்வேறு திறன்களையும் பெறுவதாக இருக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கற்பதற்கான ஆர்வத்தைத் தூண்ட வேண்டும் என்றார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, சென்னையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குனர் மற்றும் இந்தோ ஜப்பானிய ஜி20 சிறப்புப் பேராசிரியருமான முனைவர் சுதா சேஷய்யன் அவர்கள் கலந்து கொண்டு பேசும்போது, மாணவிகள் தங்களுக்கான குறிக்கோள்களைத் தாங்களே தீர்மானித்துக் கொண்டு அதை அடைவதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்றார். கட்டுப்பாடான சுதந்திரம் பற்றிக் கூறிய அவர். சாதனையாளர்களின் குணநலன்களைப் பற்றி எடுத்துரைத்ததோடு நேர மேலாண்மை, ஒழுக்கம், குழுமனப்பான்மை, தொடர்ந்து கற்றல் மற்றும் குழுவாகப் பொறுப்புகளை ஏற்பது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா அவர்கள் கல்லூரியின் சாதனைகளையும் பல்வேறு துறைகளிலும் மாணவியர் பெற்ற வெற்றிகளையும் குறிப்பிட்டு, கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மாணவியரை வாழ்த்தி வரவேற்றார். கல்லூரியின் மூத்த மாணவிகள் தங்களது இளம் தோழிகளுக்கு விதைப்பந்துகளைக் கொடுத்து வரவேற்றனர். சிறு விதைகள் செழித்து வளர்ந்து பயன் தரும் விருட்சங்களாவது போல மாணவிகளின் திறன்களும் நற்பண்புகளும் நட்பும் பெருகி வளர வேண்டும் என்பதைக் குறிப்பிடும் விதமாக இது அமைந்தது. கல்லூரியின் ஹெல்த் கிளப் சார்பில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை மூலம் பார்வையாளர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

-சீனி, போத்தனூர்.

Comments