விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நாகலாபுரத்தை சேர்ந்த பெருமாள் - ஸ்ரீதேவி தம்பதியின் மகள் நிஷா. இவர் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேளாண் அறிவியல் பாடப்பிரிவில் பயின்று தற்போது மதுரை ஏ.சி. & ஆர்.ஐ. கல்லூரியில் பி.எஸ்.சி. (ஹானர்ஸ்) வேளாண்மை பாடப்பிரிவில் பயில்வதற்கு மெரிட்டில் தேர்வாகியுள்ளார்.
மேலும் மாணவி நிஷா மாநில அளவிலான சிலம்பப்போட்டியில் இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவி நிஷாவை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் நேரில் அழைத்து சால்வை அணிவித்து ரூபாய் பத்தாயிரம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்,
-ந.பூங்கோதை.
Comments