கோவை சரவணம்பட்டி கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரி துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கே.ஜி.ஐ.எஸ்.எல்.கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் முனைவர் அசோக் பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்ற விழாவில்,சிறப்பு விருந்தனர்கள், அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.இரத்தினமாலா வரவேற்று பேசினார். தொடர்ந்து , கல்லூரி செயலர் முனைவர் .வனிதா விழா துவக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்வர்கா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுவர்ணலதா, பேச்சாளர், எழுத்தாளர், கல்வியாளர், மற்றும் பட்டிமன்ற பேச்சாளர், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, சுமந்த் மல்ஹோத்ரா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களடையே உரையாற்றினர்.முன்னதாக பேசிய சுவர்ணலதா தமது வாழ்க்கையில் பட்ட பல்வேறு துயரங்களில் இருந்தும் மீண்டு,தற்போது சமூக பணியில் பல்வேறு விருதுகள் பெற்று,தமது தன்னம்பிக்கையால் உயர்ந்து வந்ததை சுட்டி காட்டினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடர்ந்து பேசிய பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா,கல்லூரி மாணவ,மாணவிகளின் இந்த இளம் பருவம் வாழ்வின் முக்கிய முடிவுகளை எடுக்கும் முக்கியமான பருவம் என குறிப்பிட்டார்.எனவே இந்த கல்லூரி வாழ்க்கை என்பது,வாழ்வின் வெற்றியாளர்களை உருவாக்கும் இடம் என தெரிவித்தார்.மதிப்பெண்கள் மட்டுமே தம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாது என கூறிய அவர்,கல்லூரி காலத்தில் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார்.நிகழ்ச்சியில்,
கே ஜி ஐ எஸ் எல் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் ராஜேந்திரன் , கே ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் வித்யா உட்பட . முதலாம் ஆண்டு மாணவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments