அருள்நிதி நடிப்பில் வெளியாக உள்ள "டிமான்டி காலனி 2" திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் அதன் தயாரிப்பு நிறுவனத்தின் ஐ.டி ஊழியர்களுக்கு கோவை பிராட்வே திரையரங்கில் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது!!

அதனை காண GHOST வேடத்தில் வந்த ஊழியர்கள் நடனமாடி கொண்டாடினர். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் "தங்கலான் , அருள்நிதி நடிப்பில் "டிமான்டி காலனி-2"  மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் "ரகு தாத்தா" உள்ளிட்ட மூன்று திரைப்படங்கள் வெளியாகிறது.  

இந்நிலையில் "டிமான்டி காலனி 2"  தயாரிப்பாளரின் ஐடி நிறுவன ஊழியர்கள் 450 பேருக்கு கோவை பிராட்வே திரையரங்கில் பிரத்தியோகமாக அதன் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்பட்டது.  

"டிமான்டி காலனி-2" திரைப்படம் வெளியாவதையொட்டி முன்னோட்டக் காட்சிகளை பார்க்க வந்த ஐ.டி ஊழியர்கள் GHOST வேடம் அணிந்தும்,  அத்திரைப்படத்தின் பாடலுக்கு நடனமாடியும் கொண்டாடினர். இதையடுத்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திருடன் சேர்ந்து 450 ஐ.டி ஊழியர்கள் திரைப்படத்தை பார்த்தனர்.

இது குறித்து பேய் வேஷம் போட்ட ஊழியர்  கூறும்போது : 

ஒரு சிலருக்கு பேய் படம் மிகவும் பிடித்து வருவதாகவும்,  குழந்தைகளுக்கும் பேய் என்றால் பயமாக உள்ளதாகவும்,  இந்த படம் பொதுமக்களை வெகுவாக கவரும் என்ன தெரிவித்தனர்.  இந்த படம் தயாரிப்பாளர் ஐ.டி நிறுவனம் என்பதால் நாங்கள் அனைவரும் இந்த படத்தை காண பேய் வேஷம் போட்டு வந்து உள்ளோம். 

குறிப்பாக இந்த படம் ஆங்கில படத்திற்கு இணையாக ஆடியோ விஷுவல் மற்றும் வீடியோ அனைத்தும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments