கோவை மாவட்டத்தில் 565 குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன; எஸ்பி பத்ரிநாராயணன் அவர்கள் தகவல்!!!
கோவை மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருடு போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை எஸ்பி பத்ரி நாராயணன் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
"கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் கவனக்குறைவால் தவறவிட்ட 504 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 94 லட்சம் ஆகும். கடந்த 3 ஆண்டுகளில் பொதுமக்கள் கவனக் குறைவாக தொலைத்த சுமார் 3. 70 கோடி மதிப்புள்ள 2300 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
84 சைபர் கிரைம் குற்றங்கள் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்போனில் வரும் தேவையில்லாத லிங்க்கை தொட்டு தங்களது விவரங்களை தெரிவிக்க வேண்டாம். இதன் மூலம் மோசடி ஏற்படலாம். பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் 565 குற்றங்கள் கண்டறியப்பட்டு ஆரம்பத்திலேயே தடுக்கப்பட்டுள்ளன."
இவ்வாறு எஸ். பி பத்ரி நாராயணன் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments