தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் மண்வளத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அறிவுறுத்தல்...

 

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் ஆன்லைனில் ஆதார் மற்றும் பட்டா விவரங்களை பதிவேற்றம் செய்து தாசில்தார் அலுவலகம் மூலம் வண்டல் மண் அள்ளுவதற்கு ஆணை பெற வேண்டும் மேலும்  குளம் ஆறுஏரி போன்ற பள்ளமான  நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் உருவாகக்கூடிய பாறை மண் படிவமே வண்டல் மண்ணாகும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலத்தினுடைய  மேல்மண் மழையினால் ஆறு ஓடை வழியாக அடித்து வரப்பட்டு பக்கத்தில் உள்ள குளங்களில் பல்வேறு காலங்களில் சேகரிக்கப்பட்டு வருகிறது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


 வண்டல் மண்ணில் அதிகப்படியான மண்ணுக்கு தேவையான சிறு மற்றும் பெரு தனிமங்கள் மற்றும் சத்துக்களும் அதிகளவில் உள்ளது வண்டல் மண் பழுப்பு நிறத்தில் இருக்கும் மேலும் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள குளங்களில் இருக்கக்கூடிய மேல் மண்ணை 20 சென்டிமீட்டர் நகர்த்திய பிறகு அடர் பழுப்பு நிறத்தில் குருணை வடிவில் உள்ள மண் பொலபொலப்பு உடையதாக உள்ளதால் மண்ணில் தண்ணீர் தேக்கி வைக்கும் திறன் அதிகரிக்கப்பட்டு மண்ணில் ஈரப்பதம் எப்போதும் இருப்பதற்கு உதவி செய்கிறது.


தாவரங்களுக்கு தேவையான முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தனிமங்கள் கிடைக்க முக்கிய பங்கு வைப்பதால் செம்மண் சரளை மற்றும் பெருமண் உள்ள பகுதிகளில் வண்டல் மண் கண்டிப்பாக இடவேண்டும் களிமண் நிலங்களில் வண்டல் மண் போடுவதால்  களி போன்ற சிறுமண் துகள்களுக்கு இடையில் வண்டல் மண் சேரும்போது நிலத்தை  பண்படுத்துவதற்கு பெரிதும் உதவி புரிகிறது களிமண் பகுதியில் வேருக்கு தண்ணீர் கிடைப்பதோடு அனைத்து தனிமங்கள் சத்துக்கள்  கிடைப்பதால் பயிர் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது இதை பயன்படுத்தும் போது விவசாயிகள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கான உரசெலவை குறைக்கலாம் மேலும் நீர் வசதி இருக்கும் இடங்களில் பல ஆண்டுகளுக்கு நல்ல மகசூல் பெறலாம் எனவே இலவசமாக கிடைக்கும் இயற்கை உரமான வண்டல்மனை எடுத்து மண்வளத்தை மீட்க விவசாயிகள் முன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.                                    

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.

Comments