மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது!!
கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்தும் வீரர்,வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவையில் மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியின் 19 வது ஆண்டு விழாவை முன்னிட்டு சய ஷிகான் ஷோட்டோகான் 2 வது மாநில அளவிலான கராத்தே போட்டி சரவணம்பட்டி பகுதியில் உள்ள டான் போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மை கராத்தே இண்டர்நேஷனல் சார்பாக நடந்த இந்த போட்டியில் திருச்சி, சென்னை, காஞ்சீபுரம், கோவை, வேலூர், ஈரோடு, கரூர், மதுரை, கன்னியாகுமரி உள்பட மாநிலம் முழுவதிலும் வீரர்-வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இதில் 5 முதல் 25 வயது பிரிவு மற்றும் உடல் எடை பிரிவில் நடத்தப்பெற்ற இந்த போட்டியில் கட்டா மற்றும் குமுத்தே என்ற போட்டி பிரிவில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மாணவர்கள் பங்கேற்று பரிசுகளை பெற்றனர்.
முன்னதாக போட்டிகளை கோயம்புத்தூர் ஸ்போர்ட்ஸ் கராத்தே பள்ளி சங்கத் தலைவர் கார்த்திகேயன், செயலர் ராஜா ஆகியோர் துவக்கி வைத்தனர். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், டிசம்பர் மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவில் கராத்தே போட்டியில் தமிழக அணிக்காக பங்குபெற உள்ளதாக,போட்டியின் ஒருங்கிணைப்பாளரும் மைகராத்தே இன்டர்நேஷனல் கராத்தே பள்ளியின் தலைவர் சென்சாய் தியாகு நாகராஜ் தெரிவித்தார்.
இப்போட்டியை நடத்திய மற்றும் பயிற்சியாளர்கள் சென்சாய் சிவமுருகன், அரவிந்த், விது ஷங்கர், சரவணன், பிரசந்த், விமல் பிரசாத், பவிலாஸ், தேவதர்ஷினி ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments