தேள் கொட்டியதில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

எட்டயபுரம் அருகே நண்பர்களுடன் கபடி விளையாடிக் கொண்டிருந்த போது தேள் கொட்டியதில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகில் உள்ள சப்பனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் ராஜ கமலேஷ் (15), அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறை தினமான நேற்று ராஜ கமலேஷ் அங்குள்ள பிள்ளையார் கோவில் முன்பு நண்பர்களுடன் கபடி விளையாடிக் கொண்டிருந்தாராம். 

அப்போது அவரது காலில் ஒரு தேள் கொட்டியதாம். இதில் உடலில் விஷம் ஏறி மயங்கி விழுந்த சிறுவனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு ராஜ கமலேஷ் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து எட்டயபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Comments