'ட்ரான்ஸ்பார்மிங் கான்கிளேவ் 2024' எனும் கருத்தரங்கில் 'இன்ஸ்பிரேஷன் குரு' எனும் விருதுகள் வழங்கப்பட்டது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்எஸ்விஎம் பள்ளியில் மூன்றாவது ஆண்டாக கடந்த 1ம் தேதி முதல் 3ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெற்ற டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் நிகழ்ச்சியில் 'இன்ஸ்பிரேஷன் குரு விருதுகள் 2024' எனும் தலைப்பில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கபட்டது.
இதனை தொடர்த்து இன்றைய சமூகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த கல்வியாளர்களுக்கு பாராட்டுவிழாவும், இனையதள கானோளி காட்சி மூலமாக நாடாளுமன்ற உறுப்பினரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான டாக்டர். ஷஷி தரூர், எழுதிய ஏ வொண்டர்லேன்ட் ஆப் வேர்ட்ஸ் அரோவ்ண்ட் தி வேர்டு இன் 101 எஸ்சேஸ் என்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் புகழ் பெற்ற பத்திரிகையாளரும், லூசிட் லைன்ஸின் நிறுவனருமான ஷோமா சௌத்ரி சசிதரூருடன் இனைய வழியில் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய சசிதரூர் கூறியதாவது; "இந்தியா என்பது பொருளாதார வளர்ச்சி அல்லது உள்கட்டமைப்பு மேம்பாட்டின் விளைபொருள் மட்டுமின்றி, நாம் வளர்த்தெடுக்கும் கருத்துக்கள், நாம் வளர்த்தெடுக்கும் ஞானம் மற்றும் நாம் பகிர்ந்து கொள்ளத் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளின் விளைவாக இப்புவி அமைகின்றது. துருவமுனைப்பு மற்றும் குறுகிய பார்வையால் பிளவுபட்ட இந்த உலகில், நமது தேசத்தின் உண்மையான பலம், அதன் பௌதீக எல்லைகளில் இல்லை, நமது அறிவுசார் சொற்பொழிவின் மூலமாகவும், பலதரப்பட்ட முன்னோக்கு கருத்துக்களுடன் அதனை மேம்படுத்தும் தைரியம் மற்றும் அதைப் புரிந்துகொள்ளும் திறனிலும் உள்ளது என்றார். இந்த நிலையான கருத்துப் பரிமாற்றத்தின் மூலமாகவும், உண்மை மற்றும் சீரான அறிவைப் பின்தொடர்வதில் உறுதிபூண்டுள்ள தலைவர்கள் மூலமாகவும் நாம் நம்பிக்கை, புதுமை மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்க முடியும் என்றார். தொடர்ந்து பேசியயவர் "வார்த்தைகள் மற்றும் ஞானம்: சிந்தனைத் தலைமையின் மூலம் ஒரு நெகிழ்ச்சியான இந்தியாவை உருவாக்குதல்" என்ற தலைப்பில் மாணவர்களுடனும் கலந்துரையாடினார். இதனையடுத்து, இன்றைய இன்ஸ்பிரேஷன் குரு விருதுகள் வழங்கபட்டது இதனை, சென்னையை சேர்ந்த தி வேலம்மாள் இண்டர்நேஷனல் பள்ளி மாணவர் கோதண்டராமன் முதல் பரிசை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து ஹைதராபாத் கேனரி தி பள்ளியைச் சேர்ந்த செல்வி லிடியா கிறிஸ்டினா,மற்றும் கணேஷ் ஆகியோருக்கு இரண்டாம் பரிசும் வழங்கபட்டது. தொடர்ந்து பல்வேறு சிறந்த கருத்துக்களை முன்வைத்த மாணவ மாணவியர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எஸ்எஸ்விஎம் கல்வி குழும நிறுவனங்களின் நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான டாக்டர் மணிமேகலை மோகன், பிரபல சமையல் கலைஞர் ராகேஷ் ரகுநாதன், மற்றும் மாணவ மாணவியர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments