ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் 20 பள்ளி ஆசிரியர்களுக்கு ஜாக் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.!!

கோவை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விழா ஒன்றில் இன்றைக்கு ஆசிரியர்களின் நிலை குறித்து பெண் ஆசிரியை ஒருவர் பேசிய பேச்சு அனைவரும் ரசிக்கும் வகையில்  அமைந்திருந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஹார்வெஸ்ட் விஷன் பவுண்டேஷன் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் 20 பள்ளி ஆசிரியர்களுக்கு ஜாக் விருதுகள் வழங்கும் விழா கோவை விமான நிலையம் அருகே உள்ள சி டி கே தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.இந்த இந்த விழாவில் கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். 

முன்னதாக விழாவில் பேசிய பூங்கொடி என்ற ஆசிரியை ஒருவர் தற்போது மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் கண்டிக்க முடிவதில்லை எனவும் ஆனால் தாங்கள் படிக்கும் பொழுது ஆசிரியர்கள் கண்டிப்பாக இருந்ததால் தாங்கள் இன்று ஒரு சிறந்த நிலையை எட்டி இருப்பதாகவும் சுட்டிக்காட்டி இன்றைய ஆசிரியர்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது என்றார்.

மேலும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்தால் ஊடகங்களில் அவர்களது பெயர்கள் விமர்சிக்கப்படுவதன் காரணமாகவே இன்று பல ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிப்பதையே நிறுத்தி விடுகின்றனர் எனவும் நகைப்புடன் கூறினார்.அவரது இந்த பேச்சு அங்கிருந்த பிற ஆசிரியர்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தவர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த விழாவில் தன்னார்வ தொண்டு நிறுவன மேலான் அறங்காவலர் டாடி ஜோ மற்றும் சி டி கே உணவகத்தின் நிறுவனர் சசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments