பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி அன்பு செய் ஆண்டின் 17 சங்கங்களின் பதவி ஏற்பு விழா! ஒரே மேடையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது!!

சுந்தராபுரம் லிண்டாஸ் மகாலில் நடைபெற்ற இதில், பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் கீழ் வரும்  2024-25 ஆம் ஆண்டிற்கான 17  சங்கங்களின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர்.

விழாவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மகாகவி பாரதி மண்டல தலைவர் லயன் செந்தில் குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் 3 வது வட்டார சேர் பெர்சன் மீனா குமாரி, 9 வது வட்டார சேர் பெர்சன் மோகன் ராஜ், 20 வட்டார சேர் பெர்சன் கர்ணன், 21 வது வட்டார சேர் பெர்சன் ஜெயகுமார் ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விழாவில் பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்ட ஆளுநர் டாக்டர் நித்யானந்தம் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நேரு நகர் அரிமா சங்கத்தின் தலைவர் கனலி என்கிற சுப்பு வரவேற்று பேசினார்.

17 சங்கத்தின் புதிய உறுப்பினர்களை முன்னால்  ஆளுநர் டாக்டர் சாரதா மணி பழனிச்சாமி அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து சி.எஸ்.ஆர்.சவுத் தலைவர் மற்றும் முன்னால் ஆளுநர் ராம்குமார் புதிய நிர்வாகிகளிடம் உறுதி மொழியை  ஏற்று  பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளர்களாக முன்னால் ஆளுநர்கள் டாக்டர் பழனிசாமி,டாக்டர் ஜீவானந்தம்,கருணாநிதி மற்றும் முதல் துணை நிலை ஆளுநர் ராஜசேகர் இரண்டாம் துணை ஆளுநர் செல்வராஜ் மற்றும் கேட் ஒருங்கிணைப்பாளர் சூரிய நந்தகோபால் ஆகியோர் சேவை திட்டங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் பல்வேறு சேவை திட்டங்களை அனைத்து சங்க உறுப்பினர்களுடன் இணைந்து தொடர்ந்து சிறப்பாக செய்வது என முடிவு செய்யப்பட்டது. விழாவில், 17 சங்க தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், மண்டல, மாவட்ட தலைவர்கள் மற்றும் வட்டாரத் தலைவர்கள், என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments