கோவை வ.உ.சி.மைதானத்தி்ல் பிரம்மாண்ட கடல் கன்னி கண்காட்சி துவக்கம்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை வ.உ.சி.மைதானத்தி்ல் பிரம்மாண்டமான மரைன் எக்ஸ்போ எனும் கடல் கன்னி கண்காட்சி துவங்கியது.
எம்.கே.சி.எண்டர்டெயின்மெண்ட் சார்பாக துவங்கப்பட்ட கடல் கன்னி கண்காட்சி குறித்து எம்.கே.சி.எண்டர்டெயின்மெண்ட் உரிமையாளர் சிட்டி பாபு மற்றும் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசினர்..
கோவை வாழ் மக்களுக்கு புதிய அனுபவத்தை தரும் வகையில் துவங்கப்பட்ட இந்த கண்காட்சி சுமார் ஒன்றரை இலட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,கண்காட்சியை காண வரும் பொதுமக்களுக்கு அரசு வழிகாட்டுதலின் படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினர். ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகன நிறுத்த வசதிகள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினர்.
குறிப்பாக கோவையில் இது போன்ற பிரம்மாண்ட கண்காட்சி முதல் முறையாக நடைபெறுவதாகவும்,வெளிநாடுகளில் இருப்பதை போன்ற இலட்சக்கணக்கான மீன்களை கொண்ட சுரங்கங்கள்,கடல் கன்னி உள்ளிட்டவை பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என கூறினர்.
மேலும் இந்த பொருட்காட்சியி்ல் குழந்தைகள், பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள்,வெளிநாட்டு பிரம்மாண்ட ராட்டினம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாகவும், உணவு அரங்கங்கள் ஸ்னோ வேர்ல்ட் பேய் வீடு 3D கண்காட்சி அரங்குகள் உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் விட்டு உபயோக பொருட்கள், விற்பனைக்கான அரங்குகள் என 50 க்கும் மேற்பட்ட அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த பேட்டியின் போது,
அபுதாகீர்,
இஸ்மாயில்,
பாண்டியன் ,
ஜியாவுதீன்,
அபுதாகீர்,
சித்தார்த் உள்ளிட்டோர் உடனி்ருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments