கே.ஜி.எஃப் எனும் பிரம்மாண்ட பொழுது போக்கு மற்றும் விற்பனை கண்காட்சி துவக்கம்!!
ஜங்கிள் புக் பிரம்மாண்டம், விளையாட்டு அம்சங்கள்,அனைத்து வகையான உணவு அரங்குகள் என அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் கோவை வாழ் மக்கள் காண அரிய வாய்ப்பு.
கோவை காளப்பட்டி சாலையில் உள்ள கெட்டி மேளம் மகாலில் பிரம்மாண்டமான கோவை கிராண்ட் ஃபெஸ்டிவல் கண்காட்சி துவங்கியது. என்.ஐ.ஈவென்ட்ஸ் சார்பாக அதன் நிர்வாக இயக்குனர் ராஜா ஒருங்கிணைப்பில் கோவையில் கே.ஜி.எஃப்.(K.G.F.) எனும் கோவை கிராண்ட் ஃபெஸ்டிவல் எனும் பொழுது போக்கு மற்றும் அனைத்து வகையான விற்பனை கண்காட்சி காளப்பட்டி சாலையில் உள்ள கெட்டி மேளம் மகாலில் துவங்கியது.
செப்டம்பர் 26 ந்தேதி துவங்கி 29 ந்தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில் ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா, பாலா என பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை வாழ் மக்களுக்கு புதிய அனுபவத்தை தரும் வகையில் துவங்கப்பட்ட இந்த கண்காட்சியில், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், அறுசுவை உணவுகளை உண்டு மகிழ உணவு அரங்குகள், வீட்டு உபயோக பொருட்கள், பெண்களுக்கான ஆடை அணிகலன்கள், முன்பதிவு அடிப்படையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர கார்களை வாங்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கோவையில் அனைத்து விதமான பொழுது போக்கு அம்சங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளை கூடிய இது போன்ற பிரம்மாண்ட விற்பனை கண்காட்சி முதல் முறையாக நடைபெறுவதாக என்.ஐ.ஈவென்ட்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜா தெரிவித்தார்.
-சீனி, போத்தனூர்.
Comments