சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த வாலிபர் தற்கொலை முயற்சி!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே அமைந்திருக்கும் சொக்கநாடு  எஸ்டேட்டில் பேக்ட்ரி  டிவிசன் வசித்து வரும் சிறுமி தமிழ்நாட்டில் கல்வி பயின்று தேர்வு முடிந்து தற்பொழுது வீட்டிற்கு வந்துள்ளார். நோட்டமிட்ட விக்னேஷ் என்ற வாலிபர் அந்த சிறுமையை வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். சுதாரித்துக் கொண்ட சிறுமி சமையலறைக்கு சென்று தன்னை தற்காத்துக் கொள்வதற்காக கத்தியை எடுத்து விக்னேஷ் தாக்கியுள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தாக்கப்பட்ட விக்னேஷ் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து சிறுமியை மீட்டனர். பின்னர் உறவினர்கள் சென்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர் புகார் செய்த நிலை புகாரின் அடிப்படையில் குற்றவாளியான விக்னேஷை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். காவல்துறையினர் தேடுவது அறிந்து உடனடியாக தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த விக்னேஷ் விஷம் அருந்தியுள்ளார் உடனடியாக கைது செய்யப்பட்ட விக்னேஷை மூணார் ஹை ரேஞ்ச் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடனடியாக காவல்துறை பாதுகாப்புடன் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருடைய சிகிச்சை முடிந்த பின்னர் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் என காவலர் காவல் துறையினரால்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த விக்னேஷ் என்பவர் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-ஜான்சன். 

மூணார்.

Comments