கோவை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு இலவச நுரையீரல் பரிசோதனை முகாம் நடைபெற்றது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் நுரையீரல் சிகிச்சை மையத்தின் 5வது ஆண்டு துவக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்துஸ்தான் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவர்கள் உன்னித்தன், ஸ்ரீகாந்த், நாகராஜன், நந்த கோபால் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக ,கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக,உலக நுரையீரல் நல தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறை போக்குவரத்து காவலர்களுக்கான நுரையீரல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் குறட்டை பாதிப்புகள் குறித்த பரிசோதனை முகாமையும் துவக்கி வைத்தார்.
போக்குவரத்து காவலர்கள் சாலைகளில் நாள்தோறும் நின்று போக்குவரத்தினை சரி செய்யும் போது பல்வேறு மாசினால் பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். எனவே அவர்களது நலன் கருதி நுரையீரல் முகாமில் அது தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பாதிப்பு உள்ளானவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும்,மருந்துகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாக மேலாளர் சிவசைலம் செய்திருந்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments