மகாகவி பாரதியார் நினைவு தினத்தின் சரியான தேதியை அறிவிக்க வேண்டும்! - எட்டயபுரம் மக்கள் கோரிக்கை
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்திய சுதந்திர போராட்டத்தில் தனது கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் மக்களிடையே பெரும் சுதந்திர எழுச்சியை விதைத்திட்ட மகாகவி பாரதியாரின் நினைவு தினம் செப்டம்பர் 11 மற்றும் செப்டம்பர் 12 ஆகிய இரு தேதிகளிலும் அனுசரிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டு வருவதால் தற்போது வரை பாரதியாரின் நினைவு தினம் என்று என்பது பெரும் சர்ச்சைக்குரிய பேசும் பொருளாகவே இருந்து வருகிறது.
அரசு சார்பில் செப்டம்பர் 12 நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வந்த நிலையில், காலண்டர், இணையம் மற்றும் பாட புத்தகங்களில் மகாகவி பாரதி நினைவு தினம் இன்று செப்டம்பர் 11-ஆம் தேதி குறிப்பிட்டுள்ளதால் ஒரு தரப்பினர் செப்டம்பர் 11-தான் பாரதியாரின் நினைவு தினம் என்று பாரதியார் பிறந்த எட்டயபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆகையால், தமிழக அரசு பாரதியாரின் நினைவு தினம் என்று செப்டம்பர் 11 அல்லது செப்டம்பர் 12 இதில் ஒரு தேதியை அறிவித்து அனைத்து இணைய பக்கங்கள், காலண்டர்கள், பாட புத்தகங்கள் மற்றும் அரசிதழில் உள்ளிட்டவற்றில் ஒரே தேதியை குறிப்பிட்டு பாரதியாரின் நினைவு தினம் என்று அனைத்து மக்களும் குழப்பம் இன்றி பாரதியாருக்கும் மரியாதை செலுத்துவதற்கு ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அதுமட்டுமன்றி, மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தில் தொடர்ந்து வரும் இந்த குழப்பத்தை தவிர்க்க அரசு முன்வர வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களும் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். மேலும், மகாகவி பாரதியார் பிறந்த சொந்த ஊரான எட்டயபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லம் மற்றும் மணிமண்டபத்தில் ஒரு தரப்பினர் செப்டம்பர் 11-ம் தேதியான இன்றைய பாரதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.
Comments