தூத்துக்குடியில் கோரம்பள்ளம் குளத்தின் வடிகால் தூர்வாரும் பணியினை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் 3வது வடிகால் முதல் 5வது வடிகால் வரை உள்ள பகுதியில் தூர் வாரும் பணியினை விவசாய சங்கத்தினர் கோரிக்கையை ஏற்று ஸ்பிக் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி மூலம் இன்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் துவக்கிவைத்து பார்வையிட்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், விவசாய சங்க தலைவர் தனலட்சுமி சுந்தரபாண்டியன், வட்டச் செயலாளரமுத்துராஜ், வட்டப் பிரதிநிதிகள் கணேசன், முருகவேல் மற்றும் ஸ்பிக் நிறுவன அலுவலர்கள் கிஷோர் குமார், சரவணன் உள்பட பலர் கலந்து காெண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.
Comments