கோவில்பட்டி அருகே மரக்கட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு!!உரிய நிவாரணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!!


உரிய நிவாரணம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!! கோவில்பட்டி - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகசலபுரத்தில் செல்வமோகன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை  உள்ளது. இந்த தீப்பெட்டி ஆலையில் பணியாற்றிய தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த மாசிலாமணி (55) என்ற தொழிலாளி அங்கு இருந்த‌ மரக்கட்டைகள் சரிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனே மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாசிலாமணி உயிரிழந்தார். 

இந்நிலையில் உயிரிழந்த மாசிலாமணி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.‌இதனால் கோவில்பட்டி - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தடை பட்டுள்ளது. இருபக்கமும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் கோவில்பட்டி சரவணப் பெருமாள், டி.எஸ்.பி.வெங்கடேஷ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Comments