மீலாது நபி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் மருத்துவம்,பொருளாதாரம்,சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெண்களை சுய தொழில் முனைவோர்களாக மாற்றி அவர்களுக்கு வாழ்வியல் முன்னேற்றங்களை உருவாக்கும் விதமாக கட்டிடம் மற்றும் அமைப்பு சாரா தொழிற் சங்களின் கூட்டமைப்பு,இந்திய அனைத்து ஆடைகள் நல அமைப்பு சார்பாக கோவை ஜி.எம்.ஆர். பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக கோவை உக்கடம் பகுதியில் உள்ள தாஜ் டவரில் மீலாது நபி சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. செயல் தலைவர் டாக்டர் ஜி.எம்.முகம்மது ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னதாக நோய் இல்லா கோவை எனும் மருந்தில்லா மருத்துவ முகாம் துவங்கப்பட்டது. இந்த முகாமை ஆடிட்டர் கலீமுதீன் ஹாஜியார் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து வறுமையில்லா கோவை எனும் நிகழ்ச்சியை கோவை மாநகர அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் உமர் கத்தாப் துவக்கி வைத்து பேசினார். அப்போது பேசிய அவர்,பெண்கள் தங்களை சுய தொழில் முனைவோர்களாக மாற்றி கொண்டு முன்னேற்றம் பெற சமுதாயத்தில் உள்ள வாய்ப்புகளை சுட்டி காட்டி பேசினார்
தொடர்ந்து நெகிழி இல்லா கோவை எனும் நிகழ்ச்சியில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தில் உருவான பைகளின் விற்பனையை கத்தோலிக்க சங்கம் அருள்தாஸ்,எம்.பி.சி.கூட்டமைப்பு பொது செயலாளர் ராம வெங்கடேஷ், பாலகிருஷ்ணன்,ஆகியோர் துவக்கி வைத்தனர்.
முதல் விற்பனையை அரஃபா ஸ்டோர் கரும்புக்கடை கிளை உரிமையாளர் ஷாமல்,போத்தனூர் கிளை உரிமையாளர் சித்தீக்,மற்றும் உமர் கத்தாப் ஆகியோர் பெற்று கொண்டனர்.
விழாவில்
இமயம் ரஹ்மத்துல்லா, எஸ்.எஸ்.எம்.சி.
டிரஸ்ட் ஜான் எரிக்ஸ் வில்லியம் ,
ஸ்ரீ ராமசாமி கல்வி மற்றும் சேவை அறக்கட்டளையின் தலைவர் மகேஸ்வரி சிவப்பிரகாசம்,
டி.கே.டி.எம்.எஸ்.
கலையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினர்களாக
பி.கே.ஆறுமுகம்,
கவிஞர் குரு நாகலிங்கம்,
தொழிற்சங்க கூட்டமைப்பு துணை தலைவர் அருள் டி.செல்வம்,
பொறியாளர்கள் அர்ஜூன் ஸ்ரீதர்,மார்ட்டின் சுரேஷ்,
உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்..
டாக்டர் சினா பவுண்டேஷன் ஒருங்கிணைத்த மருந்தில்லா மருத்துவ முகாமில் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஜி.முகம்மது ரபி, கோவையில் கட்டிடம் மற்றும் அமைப்பு சாரா தொழிற் சங்களின் கூட்டமைப்பு சார்பாக தொடர்ந்து தொழிலாளர்கள் நலன் கருதி வாரிய தலைவர் பொன் குமார் முயற்சியின் பேரில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,சமூகதிறன் மேம்பாட்டு பயிற்சி மையம் வாயிலாக பெண்களை சுய தொழில் முனைவோர்களாக மாற்றுவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
பெண்கள் தங்களது திறன்களை வளர்த்தி கொள்ள இந்த மையத்தில் வாய்ப்புகள் வழங்குவதோடு,அவர்கள் சுய தொழில் துவங்குவது தொடர்பாக வங்கி கடன் பெறுவது,அது தொடர்பான ஆவணங்கள் எவ்வாறு பெறுவது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இங்கு வழங்குவதாக தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments