கோவையில் சர்வதேச அளவிலான (Tai Chi) டாய்- சி சர்வதேச மாநாடு!!
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பண்டைய சீனாவில் இருந்து உருவாகிய டாய் சி என்பது ஒரு நகரும் தியானம்,மனம், உடல் ஆரோக்கியம் மேம்படுவதற்கு சிறந்த பயிற்சியாக உலக அளவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஆன்மீகம் மற்றும் உடல் நலனுக்கான கலையாக இருப்பதால் இந்த கலையை பலரும் கற்று,பிறருக்கு பயிற்சி அளித்தும் வருகின்றனர். உடல் ஆரோக்கியம் மேம்படவும்,உடல் நலன் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வாகவும் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபடவும் டாய் சி எவ்வாறு பயன் படுகிறது என்பதை கூறும் விதமாக கோவையில் கோயம்புத்தூர் கிளப்பில் நான்கு நாட்கள். டாய் சி மாநாடு நடைபெற உள்ளது.
நித்திய குருகுலா ஒருங்கிணைப்பில் செப்டம்பர் 19 ந்தேதி துவங்கி 22 ந்தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாடு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நித்திய குருகுலா அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் நித்திய குருகுலா மன நல ஆலோசணை மையம் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சசி சந்தி்ரன்,துணை நிர்வாகி ஷப்ரா சுக்லா மற்றும் முதன்மை பயிற்சியாளர்கள் சில்வியா தாஸ்,கார்த்திகே, பூர்ணிமா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த மாநாட்டில் ஐம்பது வருட அனுபவம் கொண்ட மருத்துவர் டாய் சி ஆசிரியர் டாக்டர் பால் லாம் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். நான்கு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் ஒவ்வொரு நாளும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வாழ்க்கை முறை நோக்கம்,மன அழுத்தத்தை குறைத்தல் வேலை மற்றும் வாழ்க்கை நிலை சம நிலை,செயல் திறனை மோம்படுத்துவது உள்ளிட்ட மனித வாழ்வு உடல் ஆரோக்கியம் குறித்து டாய் சி உடனான பயிற்சி மற்றும் அது குறித்த விளக்கங்களை வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments