ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் "இ.பி.ஜி. சமூக நவீளமைப்பு மாநாடு-2024!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதன் தொடக்கவிழாவிற்கு முனைவர் இ.பாலகுருசாமி தலைமை வகித்தார். கற்பகம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கே.ராமசாமி வரவேற்றார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மற்றும் கேரளா மாநில முன்னாள் ஆளுநர் பி.சதாசிவம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கோவை எஸ்.வி.பி.ஐ.எஸ்.டி.எம். இயக்குநர் முனைவர் பி.அல்லிராணி, பாலக்காடு ஐ.ஐ.டி., பதிவாளர் முனைவர் பி.தியாகராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினர். வழக்கறிஞர் கே.சுமதி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார். முடிவில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் முனைவர் கே.சுந்தரராமன் நன்றி கூறினார்.
அதைத்தொடர்ந்து 'பெண்களை அதிகாரமூட்டல், சமூகம் வளர்த்தல்'என்ற தலைப்பில் குழு விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுடெல்லி பொது கொள்கை விரிவுரையாளர் திருமதி வினிதா ஹரிஹாள், சாந்தி ஆஸ்ரம் தலைவர் முனைவர் வினு அரம், காவல்துறை முன்னாள் தலைவர் ஏ.பாரி. ஐ.சி.சி.சி., மண்டலத் தலைவர் ஏ.நடராஜன், ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர் முனைவர் கவிதாசன், இந்திய பெண் தொழில்முனைவோர்கள் அமைப்பின் நிறுவனர் திருமதி மீனாட்சி சரவணன் ஆகியோர் உரையாற்றினார்.
மாலை நடைபெற்ற நிறைவு விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் திரு ஆர்.சுந்தர் தலைமை வகித்தார். கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் சி.எஸ்.ஓ., முனைவர் எஸ்.பாலுசாமி வரவேற்றார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் பி.கீதாலட்சுமி சிறப்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், மாநாட்டு செயலர் முனைவர் பிந்து விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆதித்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் பொறியாளர் சி.சுகுமாரன் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments