அரசம்பாளையம் அரசு பள்ளிக்கு ரூ 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியம் அரசம்பாளையம் அரசு பள்ளியில் வகுப்பறை கட்டடிட அடிக்கல் நாட்டு விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மாணவர்களிடையே பேசிய அவர், கோவை மாவட்டம் மருத்துவம், தொழில் துறைகளில் முன்னணி மாவட்டம் என்பது மட்டுமல்லாமல் கல்வியிலும் சிறந்த மாவட்டமாக உள்ளது. இந்த வளர்ச்சிக்கு கோவை தொழில்துறையினர் தொழில், மருத்துவம் கல்வித்துறையில் ஆற்றிய பங்களிப்புகள் தான் பெரிதும் காரணம். சிஎஸ்ஆர் எனப்படும் தொழில் நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு திட்டம் அரசால் சட்ட பூர்வமாக கொண்டுவரப்படுதற்கு முன்பே கோவை தொழில் நிறுவனங்கள் சமுதாய பணிகளில் உரிய பங்களிப்பை ஆற்றி உள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர்கள் பசியோடு பாடம் படிக்க கூடாது என்பதற்காக மதிய உணவு திட்டத்தோடு, காலை சிற்றுண்டி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. எமிஸ் என்கிற பள்ளி மேலாண்மை திட்டம் வாயிலாக மாணவ, மாணவியரின் அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டு மேலாண்மை செய்யப்படுகிறது என்றார்.
மாணவர்களின் கற்றல் திறன், தேர்ச்சி சதவீதம் உள்ளிட்ட அனைத்தும் தொடர்ந்து கண்காணிப்படுகிறது. பிளஸ் டூ முடித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களின் சதவீதம் கண்காணிக்கப்படுகிறது.கோவையில் கடந்த கல்வி ஆண்டு 95 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். எமிஸ் திட்டத்தில் திரட்டப்படும் தகவல்கள் மாணவர்களின் கல்லூரி கல்வி தரவுகளோடு இணைக்கப்பட்டு உயர்கல்வி முடிக்கும் வரை அவர்களுக்கு உதவுகின்றன.
இந்த பள்ளி கட்டிடத்திற்கு நிதி உதவி செய்த ரோட்டரி சங்கம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments