ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், மார்பக புற்றுநோய் குறித்து டிஜிட்டல் விழிப்புணர்வு பிரச்சாரம்!!
கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் (SRIOR), உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மக்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரத்தை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் பிரத்யேக இணையதளம் மூலம் SRIOR தொடங்கியுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பிரச்சாரத்தின் அறிமுக நிகழ்வு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாகம் அறங்காவலர் சுந்தர், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி சுவாதி ரோஹித், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர்.குகன் ஆகியோர் பங்கேற்றனர்.இந்த டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரத்தை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாகம் அறங்காவலர் சுந்தர் முன்னிலையில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அதிகாரி சுவாதி ரோஹித், தொடங்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
2024 உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கான உலக சுகாதார நிறுவனத்தின் கருப்பொருளான "மார்பக புற்றுநோயை யாரும் தனியாக எதிர்கொள்ளக்கூடாது" என்ற செய்தியுடன் ஒன்றாக அமையும்படி SRIORன் டிஜிட்டல் உறுதிமொழி பிரச்சாரம் அமைந்தது.இந்த பிரச்சாரம் மூலம் சமுதாயத்தில் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்ற உறுதிமொழியை எடுக்க, மக்கள் https://mhits.in/SRIOR/breast_cancer_2024/ என்ற இணையதளத்திற்கு அல்லது இதற்கான பிரத்தியேக QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சீனி, போத்தனூர்.
Comments