உலகத்தர கட்டிட வடிவமைப்பில் சந்திரமாரி சர்வதேச பள்ளி!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பள்ளியின் செயல்பாடுகள் குறித்து பேசிய தலைவர் முனைவர் முரளிகுமார், சந்திரமாரி பள்ளி கடந்த ஆண்டு இதே நாளில் தொடங்கினோம். கடந்த வருடத்தில் மாணவர்களின் திறமைகளை அறிந்தும் பெற்றோர்களின் தேவைகளை அறிந்தும் உயர்தரகல்வியை கொடுத்துள்ளோம்
சர்வதேச கல்வியை இந்த பகுதியில் வழங்கிட வாய்ப்பு அளித்ததற்காக கோவையில் உள்ள மக்களுக்கு முதலில் நன்றி கூறுகிறோம்.
பெற்றோர்கள் எங்கள் மீது நம்பிக்கையை வைத்து பெரும் ஆதரவை வழங்கி உள்ளனர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு உலக தர கல்வியை கொடுக்க முழுமையாக எங்கள் ஈடுபாட்டை கொடுத்துள்ளோம்.
சர்வதேச தரத்திலுள்ள கட்டிட வடிவமைப்பின் முகப்பு மேலை நாட்டிற்கு வந்த அனுபவத்தை உணர்த்துகிறது. தற்போது புதிதாக தொடங்கப்பட்ட பேஸ்2 கட்டிடத்தில் ஒவ்வொரு வகுப்பறையும் டச் ஸ்கிரீன், கம்ப்யூட்டர் போர்டு எனப் பாடங்களை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மூன்று அடுக்கு கொண்ட இக்கட்டிடத்தில் 33 வகுப்பறைகள் உள்ளன. இது தவிர இயற்பியல், வேதியல், உயிரியல் ஆய்வுக்கூடங்கள் டான்ஸ் ஸ்டுடியோ, ஆடியோரெக்கார்டிங் தியேட்டர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி உள்ளோம். மேலும் குழந்தைகளின் திறனை அறிந்து. அதற்கு ஏற்ற வகையில் இனவேஷன் ஆய்வகங்களும் ஏற்படுத்தி உள்ளோம்
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உலகம் முழுவதும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமையும் வகையில் ஒவ்வொரு வகுப்பறையும் அனைத்து வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments