இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணி பயிற்சி முகாம்!!
உலகின் பல்வேறு நாடுகளில் மக்களின் துயர் நீக்கவும்,மேம்பாட்டுக்காகவும் சாதி, மத, மொழி வேறுபாடுகள் இன்றி, தன்னலமற்ற சேவையையே குறிக்கோளாகக் கொண்டு செஞ்சிலுவை சங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கோவை மாவட்டம் சார்பாக கடந்த 2011 ஆண்டு முதல் இளையோர் செஞ்சிலுவை சங்கம் வாயிலாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேரிடர் கால மீட்பு, அவசர கால முதலுதவி, போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கோவை மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் கால மீட்பு பணி மேலாண்மை குறித்த ஆறு நாட்கள் பயிற்சி முகாம் துவங்கியது. கோவை இடிகரை பகுதியில் உள்ள ஆதித்யா சர்வதேச பள்ளியில் ஆறு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இதில், கோவை மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் துணை தலைவர் டாக்டர் முரளி, உயர்மட்ட குழு உறுப்பினர் மோகன் சங்கர் மற்றும் குமுதா பழனிச்சாமி, பூங்கோதை மற்றும் பள்ளி முதல்வர் அத்யா பர்வீன் பாபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆறு நாட்கள் நடைபெற உள்ள இதில் சுமார் 29 கல்லூரிகளில் இருந்தும் 190 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் ஒவ்வொரு நாளும் விபத்து, இயற்கை சீற்றம்,நில அதிர்வு,வெள்ள பெருக்கு, தீ விபத்து போன்ற பேரிடர் நேரங்களில் இடர்பாடுகளில் பாதிக்கப்பட்டோரை சரியான முதலுதவி அளித்து உயிர் காப்பது, சூழ்நிலைகளுக்கு தகுந்தபடி எவ்வாறு செயல்படுவது போன்ற பேரிடர் கால மீட்பு மேலாண்மை குறித்து,வழங்க உள்ளதாக முகாம் செஞ்சிலுவை சங்கத்தினர் தெரிவித்தனர்.
-சீனி, போத்தனூர்.
Comments