புளியங்குடியில் அடையாளம் தெரியாத வாலிபர் உடல் அடக்கம்!!
புளியங்குடி, அக். 25 ; புளியங்குடியில் அடையாளம் தெரியாமல் இறந்த வாலிபர் உடலை காவல் துறையும் , தமுமுக மருத்துவர் அணியும் இணைந்து அடக்கம் செய்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
புளியங்குடி சிந்தாமணி பஸ் நிலையம் அருகில் கடந்த 8ம்தேதி மனநலம் பாதித்த நிலையில் சுமார் 45 வயது மதிக்க வாலிபர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பஸ் பயணிகள் மற்றும் வியாபாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். புளியங்குடி எஸ்.ஐ. மாடசாமி மற்றும் போலீசார், வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 12ம்தேதி இறந்தார். அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இதனால் இறந்த நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள், புளியங்குடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் அறிவித்திருந்தனர். ஆனால் இறந்த நபர் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து புளியங்குடி போலீசார் மற்றும் தமுமுக மருத்துவரணியினர் இணைந்து இறந்த நபரின் உடலை நேற்று (அக்.23) அடக்கம் செய்தனர். இதில் எஸ்.ஐ. மாடசாமி, காவலர்கள் சுப்பையா, காளிராஜ், நவமணி மற்றும் தமுமுக சார்பில் மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான் , செய்யது அலி , பாதுஷா மற்றும் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தென்காசி மாவட்ட செய்தியாளர்
-திருமலை குமார்.
Comments