என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது!!

கோவை என்.ஜி.பி கல்லூரியில் நடந்த 13வது பட்டமளிப்பு விழாவில் இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (AICTE) உறுப்புச் செயலர் இராஜீவ்குமார் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை காளபட்டி பகுதியிலுள்ள டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா, டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. டாக்டர் என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர், டாக்டர் நல்ல.ஜி.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில்  இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (AICTE) உறுப்புச் செயலர்  பேராசிரியர். இராஜீவ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு  மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். நடப்புக் கல்வியாண்டுக்கான ஆண்டறிக்கையை, என்ஜிபி தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர். எஸ்.யு.பிரபா அவர்கள் சமர்ப்பித்தார். இதில் டாக்டர். என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஓ.டி.புவனேஸ்வரன்,  டாக்டர் என்.ஜி.பி. கல்வி குழுமங்களின் கல்லூரிச் செயலாளரும் அறங்காவலருமான டாக்டர் தவமணி. டி.பழனிசாமி, டாக்டர் அருண் என். பழனிசாமி,  கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் வெவ்வேறு பாடப் பிரிவுகளில் இருந்து இளநிலை மற்றும் முதுநிலைப் பட்ட பாட பிரிவுகளில் பயின்ற 567 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்களது பட்டங்களை பெற்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments