குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் விழிப்புணர்வு ஓட்டம் 'கிட்டத்தான் 2024' நடைபெற்றது!!

கோவையில் நீரிழிவு நோயால் பாதித்த குழந்தைகள் உட்பட 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் விழிப்புணர்வு  ஓட்டம் "கிட்டத்தான் 2024"

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன்  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 இந்தியாவில் நாளுக்கு நாள் குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் அதிகரித்து வருவதால், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  ரோட்டரி இ கிளப் ஆஃப் மெட்ரோ டைனமிக்  மற்றும் இதயங்கள் அறக்கட்டளை இணைந்து  , கோவையில் 250 க்கும் மேற்பட்ட நீரிழிவு நோயால் பாதித்த குழந்தைகள் உட்பட 1500க்கும்  மேற்பட்டோர் பங்கேற்ற குழந்தைகளுக்கான நீரிழிவு நோய்க்கு எதிரான விழிப்புணர்வு  "கிட்டத்தான் 2024"  இரண்டாவது பதிப்பு  நடைபெற்றது.

இந்தியாவில் டைப் 1 டயபெட்டிக் குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  தமிழ்நாட்டில் 20 ஆயிரம் குழந்தைகளுக்கும், இந்திய அளவில் 5 லட்சம் குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு இருக்கின்றன. 6 மாத குழந்தைகள் முதல் இந்த பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்ற நிலையில், பள்ளி செல்லும் குழந்தைகளில் 1 % பேர் நீரிழிவு நோய்க்கு பாதிக்கப்பட்டிருக்கின்றனர். போதுமான விழிப்புணர்வின்றி மருந்துகளை உட் கொள்ளாததால், சிறுவயதிலேயே சிறுநீரகம் செயலிழப்பு,  உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு  உள்ளாகின்றனர். குழந்தைகள் எடை குறைந்து உடல் மெலிய ஆரம்பித்து, குழந்தைகளின் உடலில் ஆட்டோ இம்யூன் டிசீஸ் ஏற்படுகின்றன. இந்த நிலையிலெ குழந்தைகளின் கணையம் பாதிக்கப்படுகின்றன. இதனால் இன்சுலின் சுரப்பி செயல்பாடு தடைபடுகின்றன. இவ்வாறான குழந்தைகளுக்கு தினமும் 4 முறை இன்சுலின் மருத்து செலுத்த வேண்டும். முறையாக மருந்துகள் உட்கொண்டால் குழந்தைகள் உடல் நலம் பேணி, வழக்கமான வாழ்கை நடைமுறையில் பயணிக்க முடியும். ஆனால் அது குறித்து விழிப்புணர்வு பெற்றோரிடம் இல்லை.

 இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் இரண்டாவது  குழந்தைகளை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற "கிட்ஸ் வாக்கத்தான் - கிட்டத்தான் 2024" விழிப்புணர்வு நிகழ்ச்சி தன்னார்வலர்கள் முன்னெடுப்பில் நடத்தப்பட்டிருக்கின்றன . 

'கிட்ஸ் விழிப்புணர்வு வாக்கதான் - கிட்டத்தான் 2024' என்ற பெயரில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கிட்ஸ் வாக்கத்தானில், டைப் 1 டயபெட்டிக் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 250 குழந்தைகள் உட்பட, 1500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

பந்தைய சாலை மீடியா டவரில் ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு, பந்தய சாலை முழுவதும் சுற்றி மீண்டும் அதே இடத்திற்கு வந்தடைந்தது. குழந்தைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீல நிற தொப்பி, உடை மற்றும் பதாகைகளை ஏந்தி நடந்து சென்று  சிறார் நீரிழிவு நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு குறித்து இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைமை மருத்துவர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் , திட்ட இயக்குனர் ரோட்டரி ரேஷ்மா ரமேஷ்  மற்றும் கிட்டத்தான் நிகழ்ச்சி தலைவர் சுஜை கூறுகையில்,

ஐ.சி.எம்.ஆர் 2022 இல் தனது தேசிய ஆய்வின் படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் குறைந்தது 15,000 பேர் புதிய வகை 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் தாக்கம் வேகமாக  அதிகரித்து உள்ளது.

டைப் 1 நீரிழிவு நோய் இளம் நீரிழிவு என்றும் அழைக்கப்படுகிறது, இது கணையம் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாத போது குழந்தைகளில் ஏற்படும் ஒரு தன்னுடல் தாக்க நிலையாகும், இது இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் ஆகும்.

இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், காலப்போக்கில் இதயம், இரத்த நாளங்கள், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும், நாள்பட்ட பிரச்சினைகள் மற்றும் ஆரம்ப மரணத்தை ஏற்படுத்தும். சிகிச்சை பெறும் ஒரு குழந்தை ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும்.

டைப் 1 நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோயம்புத்தூரில் உள்ள மெட்ரோ டைனமிக்ஸின் ரோட்டரி இ-கிளப் மற்றும் இதயங்கள் அறக்கட்டளையுடன் இணைந்து, 'கிடாத்தான் 2024' என்ற வாக்கத்தானை கோவையில் முதன் முதலாக நடத்தியுள்ளோம். இனி ஒவ்வொரு ஆண்டும் எந்த விழிப்புணர்வு வாக்கத்தான் நடத்தப்படும் என்றும், அறக்கட்டளையுடன் இணைந்து பல்வேறு முயற்சிகள் மூலம் சுமார் 1 கோடி ரூபாய்க்கு நிதி திரட்டி  'சிறார் நீரிழிவு உபகரணங்களை' வழங்கியுள்ளோம். இது சிறார் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பல இளம் குழந்தைகளின் வாழ்க்கைக்கு  உதவியாக இருக்கும், என தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments