கோயம்புத்தூர் விழா 2024


கோயம்புத்தூர் விழாவை முன்னிட்டு கிளாசிக் மற்றும் அயல்நாட்டு கார்களின் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு கோயம்புத்தூர்  விழா 17வது பதிப்பு இன்று முதல் நவம்பர் 23 முதல் டிசம்பர் 01 வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. 

கோயம்புத்தூர் விழா  மற்றும் கோவை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து கிளாசிக் மற்றும் அயல்நாட்டு கார்களின் கண்காட்சி மற்றும்  சாலை விதிகள் விழிப்புணர்வு பேரணி யை நடத்தியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை முன்னிட்டு கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக விழாவின் தனி சிறப்புமிக்க நிகழ்வை கோயம்புத்தூர்  விழா மற்றும் கோவை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து கிளாசிக் மற்றும் அயல்நாட்டு கார்களின் கண்காட்சி மற்றும்  சாலை விதிகள் விழிப்புணர்வு பேரணியை இன்று ரேஸ்கோர்ஸ் சாலையில், உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில் நடத்தியது.

இந்த பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் திரு. கிராந்தி குமார் பாதி கொடியசைத்து தொடக்கிவைத்தார். இந்த பேரணியானது , காஸ்மோ கிளப் வளாகத்தில் இருந்து தொடங்கி லட்சுமி மில்ஸ் உள்ள லூலூ மால் வளாகத்தில் பொதுமக்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

  

கோயம்புத்தூர் விழாவின் 17வது பதிப்பு, தலைவர் திரு.அருண் செந்தில்நாதன், இணைத் தலைவர்கள் திருமதி.சௌமியா காயத்திரி மற்றும் திருமதி.சரிதா லட்சுமி, மற்றும் விண்டேஜ் கார் பேரணி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு.கனகராஜ் ஆகியோர் இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்தனர்.

கண்காட்சியில் கோவை, பல்லடம், திருப்பூர், அன்னூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் காட்சிப்படுத்தினர். கண்காட்சியில் சுமார் 40 க்கும் மேற்பட்ட பழைய மாடல் கார்கள் இடம்பெற்றுள்ளன. 

சாலை விதிகளை பின்பற்றுவதை விழிப்புணர்வாக கொண்டு இந்த பேரணி நடைபெற்றது. ஓல்ட் கிளாசிக் மற்றும் மாடர்ன் எக்ஸோடிக்ஸ் உள்ளிட்ட 40 கார்கள் வைக்கப்பட்டு கோவையின் முக்கிய சாலைகள் மற்றும்  இடங்கள் வழியாக சென்றது . 

1931 முதல் 1980 ஆம் ஆண்டு வரையுள்ள சுதந்திரத்துக்கு முன் பயன்படுத்திய பல்வேறு வகையான கார்கள்பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பழைய மாடல் பென்ஸ், ரோஸ் ரோல்ஸ், செவர்லே, ஃபோர்டு, பத்மினி, அம்பாசடர் வோக்ஸ்வேகன் கார்கள் பழைய ஜீப் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 1960 ஆம் ஆண்டு அமெரிக்காவில்  தயாரிக்கப்பட்ட சவர்வட் வகை கார் அந்த காலத்திலேயே ஆட்டோமேட்டிக் கியர் கொண்டது. இடதுபுறம் ஸ்டீயரிங் கொண்ட கார் அனைவரையும் கவர்ந்தது .

இந்த நிகழ்ச்சியில் 60 வருட பழமையான பார்ப்பதற்கு அரிய கார்கள்  காட்சிப்பட்டு இருந்ததை குழந்தைகள், பொதுமக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments