விளாத்திகுளத்தில் சிறப்பாக நடைபெற்ற முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபோகம்...

 

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழாவின் ஏழாம் நாளை முன்னிட்டு முருகனுக்கும் வள்ளி தெய்வானை தெய்வத்திற்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சாமிகளின் திருக்கல்யாண திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது இதனை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே கோவிலில் நடை திறக்கப்பட்டு சுப்பிரமணியசாமிக்கும் வள்ளி தெய்வானை அம்பாளுக்கும் பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்  திவாரணையும் காட்டப்பட்டது.


பின்னர் மதியம் ஒரு மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த முருகப்பெருமாள் மற்றும் வள்ளி தெய்வானைக்கும் பின்னர் ஜெயந்தி நாதர் மற்றும் சண்முகவருடன் திருக்கல்யாண வடிவமும் வெகு சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிகளின் திருக்கல்யாண வடிவத்தை கண் குளிர கண்டு ரசித்து தரிசனம் செய்தனர் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின் மாலை நேரம் சாமி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Comments