கோயம்புத்தூர் கே.ஜி காலேஜ் ஆப் ஹெல்த் சயின்சஸ் கல்லூரி மாணவ மாணவிகளின் முதலாம் ஆண்டுக்கான அறிமுக விழா நடைபெற்றது.
கோயம்புத்தூர் கே.ஜி காலேஜ் ஆப் ஹெல்த் சயின்சஸ் கல்லூரியானது தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.பி.எஸ்சி. ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி என்பது கோயம்புத்தூர் கேஜி காலேஜ் ஆஃப் ஹெல்த் சயின்சஸ் மூலம் வழங்கப்படும் ஒரு சார்பு சுகாதார அறிவியல் இளங்கலை படிப்பாகும், இத்தகைய படிப்பில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கான 2024 - 2025 ஆம் ஆண்டின் அறிமுக விழா சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் வளாகத்தில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கே.ஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவச்சலம் மற்றும் கே.ஜி.ஐ.எஸ்.எல் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவச்சலம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் காவல் கண்காணிப்பாளர் கலியமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.இந்த அறிமுக விழாவில் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழாவில் பேசிய முன்னாள் காவல் கண்காணிப்பாளர் கலியமூர்த்தி, படித்து முடித்து வேலைக்கு செல்லும் வரை மாணவ மாணவிகள் செல்போன் பயன்படுத்தும் போது பாதுகாப்பாகவும் தங்களது வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை மட்டுமே செல்போன் வழியாக தேட வேண்டும் மேலும் பேஸ்புக்,இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற இணையதளங்கள் மூலம் காணும் விஷயங்களை தவிர்த்து விட்டு பெற்றெடுத்த தாய் தந்தைகளுக்கு நன்றி கடனாக படித்து தங்களது வாழ்க்கை தரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்தும் வகையில் மாணவ மாணவிகள்இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments