கோயம்புத்தூர் விழாவையொட்டி விழா வீதி நிகழ்ச்சி- அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட ஆயிரக்கணக்கான பங்கேற்பு!!

கோயம்புத்தூர் விழாவையொட்டி காந்திபுரம் பகுதியில் கோலாகலமாக நடைபெற்ற தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலாச்சார கலை நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று கண்டு களித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவையின் கலாச்சாரத்தை கொண்டாடும் வகையிலும் கோயமுத்தூர் விழா நவம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்நிலையில் இந்த விழாவையொட்டி தினந்தோறும் மாநகரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக கோவை காந்திபுரம் பகுதியில் கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் கோயம்புத்தூர் விழாவையொட்டியும் கோவை மாவட்டத்தின் 220வது தினத்தை கொண்டாடும் விதமாகவும் விழா வீதி எனும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். 

இதில் காந்திபுரம் கிராஸ் கட் சாலை துவக்கத்திலிருந்து முடியும் வரை பாரம்பரிய கலைகள் நடைபெற்றது.இதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய நடன கலைகள், தற்காப்பு கலைகள் உட்பட பஞ்சாப், குஜராத்திய மக்களும் பங்கேற்று அவர்களது பாரம்பரிய கலையை வெளிப்படுத்தினர்.இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று கண்டு களித்தனர்..

முன்னதாக இந்நிகழ்வில் தலைமை உரையாற்றிய அமைச்சர், 17 ஆண்டுகளாக ஒரு விழா சிறப்பாக நடைபெறுகிறது என்றால் அது கோவை விழா தான் எனவும் சில விழாக்கள் துவங்கி பாதியிலேயே கைவிடப்பட்டு விடும் என குறிப்பிட்டார். 

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என கூறிய அவர் கோவை மாவட்டம் தொழில்துறையில் வந்தவர்களை வாழ வைத்துள்ளது தொழில் தேடி வந்தவர்களையும் வாழ வைத்துள்ளதாக கூறினார். அண்மையில் கோவைக்கு வந்த முதலமைச்சர் 200 கோடி ரூபாயை சாலை சீரமைப்பிற்காக வழங்கி உள்ளதாகவும் விரைவில் கோவைக்கு கூடுதல்  பெருமையை சேர்க்கும் வகையில் ஏழு மாடி கட்டிடமாக பெரியார் நூலாகவும் அமைய உள்ளது என தெரிவித்தார். மேலும் கோவைக்கு ஏராளமான திட்டங்களை முதல்வர் அடைத்துள்ளார் எனவும் தெரிவித்தார். 

கோவை மாவட்டத்தில் ஹாக்கி மைதானத்திற்காக துணை முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார் எனவும் கூடிய விரைவில் கோவையில் உலக தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியம் வரவுள்ளதாக தெரிவித்தார். மேலும் கோவையின் வளர்ச்சி என்பது தமிழகத்தின் வளர்ச்சியாக இருப்பதாகவும் மருத்துவத்தின் தலைநகராக கோவை திகழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறிய அமைச்சர் இன்னும் என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அதை அனைத்தையும் இந்த அரசு செய்யும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர், மேயர், துணை மேயர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments