நாடு முழுவதும் ஒலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனையகங்கள் எண்ணிக்கை 4000 ஆக அதிகரிப்பு!!
இதன் தொடர்ச்சியாக கோவை சிங்காநல்லூர் உட்பட பல்வேறு இடங்களில் ஓலா எலக்ட்ரிக் வாகன புதிய விற்பனை மையங்கள் துவக்கம். எலக்ட்ரிக் வாகன விற்பனையில் இந்தியாவின் முன்னனி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நாடு முழுவதும் நான்காயிரம் கிளைகளுக்கு அதன் நெட்வொர்க்கை விரிவு படுத்துவதாக அறிவித்துள்ளது. தற்போது உள்ள நெட்வொர்க்கில் இருந்து நான்கு மடங்கு வரை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
சேவை வசதிகளுடன் இணைந்து 3 ஆயிரத்து 200க்கும் அதிகமான புதிய கிளைகளை அறிமுகப்படுத்தி இருப்பதன் மூலம், மின்சார வாகன நிறுவனம் பெரிய அளவிலான விரிவாக்கத்தை இயக்க திட்டமிட்டு உள்ளது. இந்தியா முழுவதும் நகர் மற்றும் புறநகர் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது சேவையை துவங்கி உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான பவிஷ் அகர்வால் கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளித்தது போல் தற்போது பெருநகரங்கள், நகரங்கள் மட்டுமின்றி தாலுகா வரையிலும் எங்கள் செயல்பாட்டை விரிவுபடுத்தி இருப்பதாகவும், இது இந்தியாவின் மின்சார வாகன பயணத்தில் இன்று ஒரு குறிப்பிடத்தக்க இலக்கை எட்டியுள்ளது என்றார்.
இதன் தொடர்ச்சியாக கோவை சிங்காநல்லூர் உட்பட பல்வேறு இடங்களில் ஓலா நிறுவனத்தின் புதிய விற்பனை மற்றும் சேவை மையங்கள் துவங்கப்பட்டன. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய வகை எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
இதன் வருடாந்திர முதன்மை நிகழ்வான "சங்கல்ப" நிகழ்ச்சியில், ரோஸ்டர் X ,ரோஸ்டர் மற்றும் ரோஸ்டர் ப்ரோ ஆகிய மாடல்களில் பல்வேறு திறன் கொண்ட பேட்டரிகள் உள்ளடக்கிய புரோஸ்டர் மோட்டார் வாகனங்கள் தொடரை அறிமுகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
-சீனி, போத்தனூர்.
Comments